நாடாளுமன்றத்திற்கு மேலும் அதிகாரமளிக்கும் வகையில் அரசியல் அமைப்பில் திருத்தம் - கோத்தபய ராஜபக்ச

இலங்கையில் நாடாளுமன்றத்திற்கு மேலும் அதிகாரமளிக்கும் வகையில் அரசியல் அமைப்பில் திருத்தம் மேற்கொள்ளப்படும் என அதிபர் கோத்தபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்திற்கு மேலும் அதிகாரமளிக்கும் வகையில் அரசியல் அமைப்பில் திருத்தம் - கோத்தபய ராஜபக்ச

பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்ச விலகியதை தொடர்ந்து அதிபர் கோத்தபய ராஜபக்சேவும் பதவி விலக வேண்டும் என மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

ஆனால் எக்காரணத்தை கொண்டும் பதவியை விட்டுக் கொடுக்க போவதில்லை என்ற நிலைப்பாட்டில் உறுதியுடன் இருக்கும் கோத்தபய ராஜபக்ச இன்னும் ஒரு வார காலத்தில் புதிய பிரதமர் தலைமையில் அரசு அமைக்கப்படும் என அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் நாடாளுமன்றத்திற்கு மேலும் அதிகாரமளிக்கும் வகையில் அரசியல் அமைப்பில் திருத்தம் மேற்கொள்ள உள்ளதாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் நாடாளுமன்றத்திற்கு மேலும் அதிகாரம் அளிக்கும் வகையில் 19 வது திருத்தத்தின் உள்ளடக்கங்களை மீண்டும் அமல்படுத்துவதற்கு வழிவகுக்கும் வகையில் அரசியலமைப்பில் திருத்தம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.