எதிர்கட்சிகளின் தொடர் அமளியால் 26ஆம் தேதி வரை மக்களவை ஒத்திவைப்பு...

பெகாசஸ் விவகாரத்தை வைத்து எதிர்கட்சிக தொடர் அமளியில் ஈடுபட்டதால் மக்களவை வரும் 26ஆம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டது.

எதிர்கட்சிகளின் தொடர் அமளியால் 26ஆம் தேதி வரை மக்களவை ஒத்திவைப்பு...
பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரத்தில், உச்சநீதிமன்றத்தின் நேரடி மேற்பார்வையில் நீதி விசாரணை நடத்த கோரி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் நாடாளுமன்றத்தில் கடும் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் நாள்தோறும் அவை நடவடிக்கைகள் எதுவும் நடைபெறாமல் முடக்கப்படுகிறது. 
 
இந்த நிலையில் நாடாளுமன்றத்தின் 4 ஆம் நாள் அமர்வான இன்று நாடாளுமன்றத்தில் வாயிலில் காந்தி சிலை முன்பு காங்கிரஸ், திமுக, சிவசேனா உள்ளிட்ட எதிர்கட்சிகளின் எம்.பிகள் ஒன்றிணைந்து பெகாசஸ் விவகாரத்தை முன்வைத்து கோஷங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டன. இதனால் நாடாளுமன்ற அவையை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. நாடாளுமன்றத்திலும் அமளி தொடர்ந்ததால் மக்களவை வரும் திங்கள் கிழமை வரை ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதேபோல் மாநிலங்களவையும் பிற்பகல் இரண்டரை மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.