நடிகை அனன்யா பாண்டே இன்று மீண்டும் ஆஜராக உத்தரவு.!!

நடிகை அனன்யா பாண்டே இன்று மீண்டும் ஆஜராக உத்தரவு.!!

போதைப்பொருள் வழக்கில் இன்று மீண்டும் விசாரணைக்கு ஆஜராகும்படி, நடிகை அனன்யா பாண்டேவிற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மும்பையில் இருந்து கோவாவுக்கு சென்ற சொகுசு கப்பலில் போதைப் பொருட்கள் பயன்படுத்தியதாக, நடிகர் ஷாருக் கானின் மகன் ஆர்யன் கான் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

போதைப்பொருள் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஒருவரது வாட்ஸ்அப் சாட்டிங்கில், நடிகை அனன்யா பாண்டேயின் பெயர் இடம்பெற்றிருந்ததாக கூறப்படுகிறது.

அது தொடர்பான விசாரணைக்கு, மும்பையில் உள்ள போதைப்பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில், தமது தந்தை சங்கி பாண்டே உடன் அனன்யா பாண்டே ஆஜரானார்.

நேற்றைய விசாரணை முடிவடைந்த நிலையில், மேலும் சில தகவல்களை பெற வேண்டியிருப்பதால், நடிகை அனன்யா பாண்டேவை இன்று காலை 11 மணிக்கு மீண்டும் விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி, போதைப் பொருள் தடுப்பு பிரிவு உத்தரவிட்டுள்ளது.