நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் குறித்து அதிமுக ஆலோசனை !!

மறைமுக தேர்தலுக்கு இன்னும் நாட்கள் இருப்பதால் மேயர் வேட்பாளர் யார் என்பதில் அதிமுக முடிவெடுக்கும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் குறித்து அதிமுக  ஆலோசனை !!

நகர் புற உள்ளாட்சித் தேர்தல் நெருங்குவதை ஒட்டி பல்வேறு அரசியல் கட்சிகளும் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில் அதிமுக ஆலோசனை கூட்டம் சென்னையில் உள்ள ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடிபழனிசாமி மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர். அதிமுக பாஜக கூட்டணியில் உள்ள சிக்கல்கள் பாஜகவுக்கு எத்தனை இடங்களை ஒதுக்குவது என்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், யாராக இருந்தாலும் அதிமுக கூட்டணியில்  இருப்பதே அனைவருக்கும் லாபம்  என்றும், அதிமுக தொண்டர்கள் தேர்தலில் போட்டியிட உற்சாகமாக இருப்பதாகவும் தெரிவித்தார்.