விபத்தில் சிக்கியவர்களை கண்டு - காரில் இருந்து இறங்கி வந்து உதவிய ஓ.பி.எஸ்! குவியும் பாரட்டுக்கள்!!

விபத்தில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த அதிமுக - வின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்.

விபத்தில் சிக்கியவர்களை  கண்டு - காரில் இருந்து இறங்கி வந்து உதவிய ஓ.பி.எஸ்! குவியும் பாரட்டுக்கள்!!

சென்னையில் சாலை விபத்தில் சிக்கியவர்களை மீட்டு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வம்  அவர்களை மருத்துவமனைக்கு அனுப் பி வைத்தார். சென்னை ஆவடி மாநகராட்சியில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை நிகழ்த்துவதற்காக,  ஓ.பன்னீர்செல்வம் காரில் சென்று கொண்டிருந்தார். அவ்வப்போது சென்னை கீழ்ப்பாக்கம் பச்சையப்பன் கல்லூரி அருகே சென்றபோது, விபத்தில் சிக்கி மூன்று பேர் விழுந்து கிடந்ததை கண்டு, ஓ. பி.எஸ். உடனடியாக காரில் இருந்து இறங்கி மூன்று பேரையும் மீட்டு ஆட்டோ மூலம் மருத்துவமனைக்கு அனுப் பி வைத்தார். ஓ பிஎஸ்ஸின் இவர் செய்த இந்த நிகழ்வை கண்டு அப்பகுதியில்  இருந்தோர் அவரை பாரட்டி வருகின்றனர்.