மிஸஸ் வேர்ல்ட் போட்டியில் இந்திய மாடல் அழகி சாதனை...சர்வதேச அளவில் அங்கீகாரம் பெற்ற ஆடை!!

அமெரிக்காவில் நடைபெற்ற மிஸஸ் வேர்ல்ட் 2022 போட்டியில் இந்தியாவை சேர்ந்த அழகி ஒருவர் வெற்றி பெற்றுள்ளார்.

மிஸஸ் வேர்ல்ட் போட்டியில் இந்திய மாடல் அழகி சாதனை...சர்வதேச அளவில் அங்கீகாரம் பெற்ற ஆடை!!

அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் மாகாணத்தில் நடைபெற்ற மிஸஸ் வேர்ல்ட் 2022 போட்டியில் இந்தியாவை சேர்ந்த  நவ்தீப் கவுர் என்ற அழகி ஒருவர் சிறந்த தேசிய உடைக்கான சுற்றில் வெற்றிப்பெற்றுள்ளார். இந்த போட்டிக்கென்றே  இந்தியப் பாரம்பரிய முறையில் தயாரிக்கப்பட்ட உடையானது தற்போது சர்வதேச அளவில் புது கவனம் பெற்றிருக்கிறது. 

அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் மாகாணத்தில் மிஸஸ் வேர்ல்ட் போட்டிகள் நடைபெற்று முடிந்துள்ளது. இந்த போட்டியில் இந்தியா சார்பில் நவ்தீப் கவுர் என்ற மாடல் அழகி பங்கேற்றார்.

இவர் கடந்த 2021 ஆம் ஆண்டில் மிஸஸ் இந்தியா வேர்ல்ட் போட்டியில் வெற்றிப்பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து இந்தியாவை சர்வதேச அளவில் பறைச்சாற்றிவந்த அவர் தற்போது 2022 மிஸஸ் வேர்ல்ட் போட்டியிலும் வெற்றிப்பெற்று மற்றொரு சாதனையை படைத்துள்ளார்.

இந்தப் போட்டியில் சிறந்த தேசிய உடைக்கான சுற்றில் இந்திய அழகி  நவ்தீப் கவுர் வெற்றிப்பெற்றுள்ளார். இவர் இந்தப் போட்டிக்காக பாம்பு போன்ற உருவம் கொண்ட தங்க ஆடையை அணிந்திருத்தார். மேலும் இந்த ஆடையில் இந்தியப் பாராம்பரியம் ததும்பியிருந்ததோடு வலிமை, சக்தி என்ற பொருளில் வடிவமைக்கப்பட்டிருந்ததால் சர்வதேச அளவில்  கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த தங்க ஆடையை எக்கி ஜாஸ்மின் என்பவர் உருவாக்கியதாகவும் கூறப்படுகிறது.