ஏரியின் தடுப்பு உடைந்ததில் அடித்து செல்லப்பட்ட 500 ஆடுகள்...

ஆந்திர மாநிலத்தில் தொடர் கனமழையால் ஏரியின் தடுப்பு உடைந்து, பட்டியில் இருந்த 500 செம்மறி ஆடுகள் நீரில் அடித்து செல்லப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஏரியின் தடுப்பு உடைந்ததில் அடித்து செல்லப்பட்ட 500 ஆடுகள்...

ஆந்திர மாநிலம் அனந்த்புர் மாவட்டத்தில் தொடர் கனமழை காரணமாக நீர் நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. அங்குள்ள சித்ராவதி ஆற்றில் நீர் கரைபுரண்டு ஓடும் நிலையில், பாபணையா ஏரி அருகில் பட்டி அமைத்து வீரநாகப்பா என்பவர் 500 செம்மறி ஆடுகளை மேய்த்து வந்துள்ளார். தொடர் மழையால் வெள்ளநீர் அதிகரித்து பாபணையா ஏரிக்கரை உடைந்து வீரநாகப்பா என்பவரது செம்மறி ஆடுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன.

500 ஆடுகளும் உயிரிழந்திருக்கும் என்கிற நிலையில் தீயணைப்பு வீரர்கள் இறந்து கரை ஒதுங்கிய ஆடுகளை மீட்டனர். இன்னும் பல ஆடுகளை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஏரி கரை உடைந்து 500 செம்மறி ஆடுகள் நீரில் அடித்து செல்லப்பட்ட சம்பவம் அப்பகுதி விவசாயிகளை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.