கர்நாடக அணைகள் நிரம்புவதால் காவிரிக்கு 18 ஆயிரம் கன அடி நீர் திறப்பு..!

கர்நாடக அணைகளில் இருந்து 18 ஆயிரம் கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளதால், காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

கர்நாடக அணைகள் நிரம்புவதால் காவிரிக்கு 18 ஆயிரம் கன அடி நீர் திறப்பு..!

கர்நாடக மாநிலத்தின் கடலோர மாவட்டங்கள் மற்றும் வட கர்நாடகாவின் சில பகுதிகளில் கன மழை கொட்டி தீர்த்து வருகிறது. மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அதனால் கர்நாடகாவின் பல மாவட்டங்களில் இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

கன மழை காரணமாக கர்நாடகாவின் முக்கிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் பல அணைகள் நிரம்பி வருவதால், தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கபினி, கிருஷ்ணராஜசாகர் உள்ளிட்ட அணைகளில் இருந்து காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. 

அதாவது கர்நாடக அணைகளில் இருந்து 18 ஆயிரம் கன அடி நீர் காவிரி ஆற்றுக்கு திறந்துவிடப்பட்டுள்ளது. அதனால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுக்காப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. காவிரியில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் மேட்டூர் அணைக்கு வரும், நீரின் அளவும் அதிகரித்து, அணையின் நீர்மட்டம் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.