மே மாதத்தில் 1 லட்சத்து 2 ஆயிரத்து 709 கோடி ரூபாய் ஜிஎஸ்டி வசூல்...

கடந்த மே மாதத்தில் மட்டும் 1 லட்சத்து 2 ஆயிரத்து 709 கோடி ரூபாய் அளவுக்கு ஜிஎஸ்டி வசூலாகி உள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

மே மாதத்தில் 1 லட்சத்து 2 ஆயிரத்து 709 கோடி ரூபாய்  ஜிஎஸ்டி  வசூல்...

இதுதொடர்பாக நிதி அமைச்சகம் வெளிட்டுள்ள அறிக்கையில், கடந்த மே மாதத்தில் மத்திய ஜிஎஸ்டி 17 ஆயிரத்து 592 கோடியும், மாநில ஜிஎஸ்டி 22 ஆயிரத்து 653 கோடியும் வசூலாகியுள்ளதாக தெரவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், ஐ. ஜிஎஸ்டி 53 ஆயிரத்து 199 கோடி ரூபாயும், செஸ்வரி 9 ஆயிரத்து 265 கோடி ரூபாயும் வசூல் ஆகி உள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.