செங்காந்தல் கிழங்கை சாப்பிட்டவர் உயிரிழந்தது எப்படி? மருத்துவர் பரூக்கின் விளக்கம்..!

செங்காந்தல் கிழங்கை சாப்பிட்டவர் உயிரிழந்தது எப்படி? மருத்துவர் பரூக்கின் விளக்கம்..!

செங்காந்தல் செடியின் கிழங்கை சாப்பிட்ட இளைஞர் உயிரிழந்துள்ளார். உயிரிழப்பிற்கான காரணம் என்ன என்பது குறித்து சிவகங்கை அரசு பொது நல மருத்துவர் பரூக் அப்துல்லா விளக்கியுள்ளார். 

இளைஞர் உயிரிழப்பு:

ஆம்பூர் அருகே செங்காந்தள் செடியின் கிழங்கை சாப்பிட்டால் உடல் ஆரோக்கியமாக இருக்கும் என்ற வாட்ஸ்அப்பில் வந்த செய்தியை நம்பி, அச்செடியில் கிழங்கை சாப்பிட்டு உயிரிழந்துள்ளார் இளைஞர் ஒருவர்.

Gloriosa Superba at best price in Chennai by Sardonyx Herbals | ID:  6196526133

மருத்துவரின் விளக்கம்:

செங்காந்தள் செடியின் கிழங்கை இயற்கை மருந்து என்று சாப்பிட்ட இளைஞர் மரணமடைந்திருப்பது துரதிருஷ்டவசமானதாகும். இது குறித்த எனது விளக்கம் : செங்காந்தள் என்பது பன்னெடுங்காலமாக மருந்தாகப் பயன்பட்டு வரும் மூலிகைச் செடியாகும். இதன் அறிவியல் பெயர் "Gloriosa superba".

இதையும் படிக்க: காங்கிரசுக்கு இருக்கும் அக்கறை கூட அதிமுகவிற்கு இல்லையா? 10% இடஒதுக்கீடு இரட்டை வேடமா?

சங்க நூல்களில் செங்காந்தல்:

இத்தகைய செங்காந்தள் குறித்து எகிப்திலும் சரி நமது சங்க கால நூல்களிலும் சரி குறிப்புகள் உள்ளன. இந்தச் செடியின் மலர் இலை வேர் குறிப்பாக கிழங்கில் கோல்ச்சிசின் (COLCICHINE ) எனும் மருந்து மூலப்பொருள் இருக்கிறது. இதன் காரணமாக இந்த செடி ஆயுர்வேதம், சித்தா , யுனானி மருத்துவப் பிரிவுகளில் கீல் வாதம் , மூட்டு வலி போன்ற ரியூமாடிக் பிரச்சனைகளுக்கு மருந்தாகப் பயன்பட்டு வந்திருக்கிறது. பயன்படுத்தப்பட்டும் வருகிறது.

குழந்தையின்மையை தரும் PCODயால் அவதியா?.. சிகிச்சை முறைகளை சொல்கிறார்  டாக்டர் பரூக் அப்துல்லா | Dr Farook Abdulla says that there is treatment  for PCOD - Tamil Oneindia

நோய்க்கு மருந்து:

நவீன மருத்துவத்தில் இந்த கோல்சிசின் - கீல்வாதம் எனும் கவுட் பிரச்சனைக்கும், மெடிட்டரேனியன் ஃபீவர் எனும் நோய்க்கும மருந்தாகப் பயன்பட்டு வருகிறது. இந்த மருந்தின் பிரச்சனை யாதெனில் இதற்கு NARROW THERAPEUTIC INDEX உள்ளது. அதாவது நோயை சரிசெய்ய கொடுக்கப்படும் மருந்தின் டோஸுக்கும் அபாயகரமான பக்கவிளைவுகளை உண்டாக்கும் டோஸ்க்கும் இடையே பெரிய வித்தியாசம் இருக்காது.

செங்காந்தள்

எச்சரிக்கை:

எனவே கொஞ்சம் இந்த மருந்தின் அளவு கூடினாலும் பல அபாயகரமான பக்க விளைவுகளை சந்திக்க வேண்டி வரும். எனவே இந்த மருந்தை மருத்துவர் பரிந்துரை இன்றி உட்கொள்வது ஆபத்தானது. இந்த கோல்சிசின் மருந்து கீழ்வாத நோய்க்கு தினமும் 1.2 மில்லிகிராம் என்ற அளவில் மட்டுமே வழங்கப்படுகிறது. ஆனால் இந்த செங்காந்தள் கிழங்கில் சுமார் 350 மில்லி கிராம் வரை கோல்சிசின் இருக்கக்கூடும்.

எத்தனை கிழங்குகள் சாப்பிட்டார்?:

ஒருவரை மரணிக்கச் செய்ய 7 முதல் 26 மில்லிகிராம் அளவு கோல்சிசின் போதுமானது எனும் போது இந்த இளைஞர் எத்தனை கிழங்குகளை சாப்பிட்டார் என்று தெரியவில்லை. கட்டாயம் உயிரைப் போக்கும் அளவு அவர் சாப்பிட்டிருக்கக் கூடும் என்பது திண்ணம். முதலில் வாந்தி வயிற்றுப்போக்கு எனும் ஆரம்பித்து பிறகு படிப்படியாக சிறுநீரகம், கல்லீரல் என்று உறுப்புகளை செயலிழக்கச் செய்து மரணத்தை தரவல்லது.

Dr.Farook's NALAM MEDICAL CENTRE - Hospital in Aranmanai Vaasal

ஏற்றுமதி:

இந்த விஷம் இந்தச் மருந்துச் செடியின் விதைகள் மற்றும் கிழங்குகள் மருத்துவ குணத்திற்காக நல்ல விலைக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. ஆயினும் மருத்துவத்தை இயற்கை மருத்துவம். பாட்டி மருத்துவம், வீட்டு மருத்துவம் என்ற பெயரில் கையில் எடுத்து இது போன்ற அசம்பாவிதங்களில் சிக்கிக் கொள்வது தவறு. முறைப்படி மருத்துவம் பயின்ற மருத்துவர்களிடம் சிகிச்சை பெறுவது தான் நல்லது. தானாக இவ்வாறான செய்தித் துணுக்குகளைப் படித்து சுய சிகிச்சை செய்யும் போது உயிருக்கு ஆபத்து நேரிடும் என்பதற்கு இது போன்ற செய்திகள் சாட்சி. 

இவ்வாறு டாக்டர் பரூக் அப்துல்லா தனது பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.