தினமும் ஒன்பதாயிரம் அடிகள் நடைப்பயிற்சி.... மாரடைப்பு?!!

தினமும் ஒன்பதாயிரம் அடிகள் நடைப்பயிற்சி.... மாரடைப்பு?!!

ஆய்வில் பங்கேற்றவர்களின் சராசரி வயது 63 ஆண்டுகள், 52% பெண்கள் என்று மாசசூசெட்ஸ் பல்கலைக்கழகத்தின் முன்னணி எழுத்தாளர் டாக்டர் அமண்டா பலுச் கூறியுள்ளார். 

தினமும் ஆறாயிரம் முதல் ஒன்பதாயிரம் அடிகள் நடப்பது மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கிறது.  அமெரிக்கா உள்பட 42 நாடுகளில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களிடம் வல்லுநர்களால் ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. 

ஆய்வில் பங்கேற்றவர்களின் சராசரி வயது 63 ஆண்டுகள்.  மேலும் அவர்களில் 52% பெண்கள் என்று மாசசூசெட்ஸ் பல்கலைக்கழகத்தின் முன்னணி எழுத்தாளர் டாக்டர் அமண்டா பலுச் கூறியுள்ளார்.  ஒரு நாளைக்கு ஆறாயிரம் முதல் ஒன்பதாயிரம் அடிகள் நடப்பவர்களுக்கு மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் ஆபத்து ஒரு நாளைக்கு 2,000 அடிகள் நடப்பவர்களுடன் ஒப்பிடும்போது 40-50 சதவீதம் குறைவாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

-நப்பசலையார்

இதையும் படிக்க:  ஆஸ்திரேலியாவில் தாக்கப்பட்ட சுவாமிநாராயணன் கோயில்.....