இந்தியாவில் அதிகம் பேர் பயன்படுத்தும் டாப் 10 பாஸ்வேர்டுகள் இவை தான்..! 4 ஆவது பாஸ்வேர்டை நீங்க யோசிக்க கூட முடியாது

இந்தியாவில் அதிகம் பேர் பயன்படுத்தும்  டாப் 10 பாஸ்வேர்டுகள் இவை தான்..! 4 ஆவது பாஸ்வேர்டை நீங்க யோசிக்க கூட முடியாது

இந்தியாவில் அதிகமாக பயன்படுத்தும் பாஸ்வேர்டு எது என்ற பட்டியல் வெளியாகியுள்ளது. Nord Secuirty இன் பாஸ்வேர்டு நிர்வாக பிரிவான NordPass இன் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பாஸ்வேர்டு:

மொபைல், லேப்டாப், மொபைல் செயலி, மின் அஞ்சல், ஆன்லைன் ஷாப்பிங் போன்றவற்றை பாதுகாக்கும் ஒரு டிஜிட்டல் பூட்டாகவே பாஸ்வேர்டு செயல்படுகிறது. இந்த பாஸ்வேர்டை ஒவ்வொருவரும் தனக்கு பிடித்தவாறு பல வகைகளில் வைப்பதுண்டு. அது எண் வடிவிலும், பெயர் வடிவிலும், எழுத்துக்கள் வடிவிலும் இருக்கலாம்.

Know the most popular password in India

பாஸ்வேர்டின் பலம்:

நாம் பாஸ்வேர்டை செட் செய்யும் பொழுது அதன் பலம் எவ்வாறு உள்ளது என்பதை காட்டும். நாம் அன்றாடம் உபயோகிக்கும் சமூக வலைதள செயலிகளுக்கு பாஸ்வேர்டு வைக்கும் பொழுது சற்று எளிதாக நினைவில் வைத்துக் கொள்ளக் கூடிய வகையிலான பாஸ்வேர்டுகளை வைப்பதுண்டு. அதே நேரம் ஆன்லைனில் ஏதேனும் பாதுகாப்பு சார்ந்த விசயங்களுக்கு வைக்கும் போது சற்று கடினமாக, யாரும் எளிதில் கண்டுபிடிக்க முடியாத வகையில் வைப்பதுண்டு.

This Is The Most Commonly Used Password In India And It Can Be Cracked In  Less Than A Second

பெயர்:

சிலர் தங்களது பெயரையே பாஸ்வேர்டாக வைப்பதுண்டு. பிறந்த தேதி, திருமண் தேதி, பிறந்த ஆண்டு என மிக சாதாராணமாக அனைவரும் கண்டுபிடிக்கும் வகையில் வைப்பர். இன்னும் சிலர் மிகவும் கடினமாக யாரும் ஹேக் செய்து விட முடியாத அளவிற்கு ரூம் போட்டு யோசித்து வைத்தது போல இருக்கும். அதை அவர்களே நினைவில் வைத்துக் கொள்வது கடினமாக இருக்கும்.

இதையும் படிக்க: இது யாருக்கெல்லாம் கடைசி உலகக்கோப்பை? சரித்திரம் படைக்கப் போவது யார்?

பாஸ்வேர்டே பாஸ்வேர்டு:

இந்தியாவில் அதிக நபர்கள் பயன்படுத்திய பாஸ்வேர்டு "பாஸ்வேர்டு" ஆகும். பாஸ்வேர்டு என்ற பெயரையே அதிக நபர்கள் தங்களது விருப்பமான பாஸ்வேர்டாக வைத்துள்ளனர். சுமார் 34,90,216 நபர்கள் இந்த "பாஸ்வேர்டு" என்ற பெயரை பாஸ்வேர்டாக  பயன்படுத்தி வந்துள்ளனர்.

50 'most-commonly' used passwords in India that can be hacked in less than  a second | Gadgets Now

123456:

இரண்டாம் இடத்தில் மிகவும் சுலபமாக எளிதில் நினைவில் இருக்கும் படியான எண்களை பாஸ்வேர்டாக பலர் வைத்துள்ளனர். இந்தியாவில் சுமார் 1,66,757 பேர் "123456" என்ற எண்களை பாஸ்வேர்டாக வைத்துள்ளனர். இந்த வகையான பாஸ்வேர்டுகளை ஹேக்கர்களால் சுலபமாக கண்டுபிடித்து விட முடியும்.

Bigbasket :

மூன்றாம் இடத்தில் "bigbasket" என்ற வார்த்தையை சுமார் 75 ஆயிரம் பேர் பாஸ்வேர்டாக வைத்துள்ளனர். நான்காம் இடத்தில் இருக்கும் பாஸ்வேர்டு "anmol123". சுமார் 10 ஆயிரம் பேர் பாஸ்வேர்டாக வைத்துள்ளனர். ஐந்தாம் இடத்தில் "abcd1234" என்பதை சுமார் 8,000 பேர் பாஸ்வேர்டாக வைத்துள்ளனர். 

Most commonly used password in India is 'password', did yours make the  list? | Trending & Viral News

Googledummy:

சுமார் 8,000 பேர் பயன்படுத்தும் "googledummy"  என்ற பாஸ்வேர்டு ஆறாம் இடத்திலும், சுமார் 7,000 பேர் பயன்படுத்தும் "indyal123" என்ற பாஸ்வேர்டு எழாம் இடத்திலும் உள்ளது. எட்டாம் இடத்தில் "qwerty123" என்ற பாஸ்வேர்டு உள்ளது. இதை சுமார் 7,000 பாஸ்வேர்டாக வைத்துள்ளனர்.

This is the most commonly used password in India: If you use it too, change  it immediately

Shopping:
   
ஒன்பதாம் இடத்தில் "shopping" என்ற வார்த்தை உள்ளது. இதை சுமார் 4,000 பேர் பாஸ்வேர்டாக வைத்துள்ளனர். சுமார் 3,000 பேர் பாஸ்வேர்டாக பயன்படுத்தும்  "iphone5s" எனற வார்த்தை பத்தாம் இடத்தில் உள்ளது.

இவ்வளவு சுலபமாக பாஸ்வேர்டுகளை ஹேக்கர்ஸ் எளிதில் கண்டுபிடித்து விட முடியும். ஆகையால் இனி நீங்கள் வைக்கும் பாஸ்வேர்டு வைக்கும் பொழுது  யாரும் எளிதில் யூகிக்கமுடியாதபடி வைப்பது நல்லது.