பத்திரிகையாளர் டு அமைச்சர்,.சைலஜா டீச்சரின் இடத்துக்கு வந்துள்ள வீணா ஜார்ஜ் என்பவர் யார்,.?

பத்திரிகையாளர் டு அமைச்சர்,.சைலஜா டீச்சரின் இடத்துக்கு வந்துள்ள வீணா ஜார்ஜ் என்பவர் யார்,.?

கேரளாவில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் இடதுசாரி கூட்டணி இரண்டாவது முறையாக வெற்றிபெற்றது. அதைத்தொடர்ந்து பினராயி விஜயன் இரண்டாவது முறையாக கேரள முதல்வராக பொறுப்பேற்கவுள்ளார். இந்நிலையில் அமைச்சரவை பட்டியலில் கடந்த முறை அமைச்சரவையில் இடம்பெற்ற ஒருவருக்கு கூட தற்போதைய புதிய அமைச்சரவையில் இடம் வழங்கப்படாமல் முற்றிலும் புதியவர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளது.

அதிலும் கொரோனா காலத்தில் சிறப்பிக்க செயல்பட்டு சர்வதேச அளவில் புகழ்பெற்ற சைலஜா டீச்சருக்கு அமைச்சரவையில் வாய்ப்பு கொடுக்கப்படாதது சர்ச்சையை கிளப்பியுள்ளது. அவருக்கு பதிலாக சுகாதாரத்துறை அமைச்சராக பத்திரிகையாளர் வீணா ஜார்ஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் யார் அந்த வீணா ஜார்ஜ் என்ற கேள்வி எழுந்துள்ளது. பலர் இணையத்தில் அவரைப் பற்றி தேடி வருகிறார்கள். இவரது தாய் சிபிஎம் சார்பில் கவுன்சிலராக திகழ்ந்தவர். இதன் காரணமாக இளம்வயதிலேயே இடதுசாரி கருத்துக்களால் ஈர்க்கப்பட்ட இவர் இளம் வயதிலேயே சிபிஎம் இன் மாணவர் அமைப்பான இந்திய மாணவர் சங்கத்தில் இணைந்து பணியாற்றினார். கல்லூரியில் படிக்கும் போது அந்த அமைப்பின் பல பொறுப்புகளை வகித்துள்ளார்.

கல்லூரி முடிந்த பின் அரசியலில் இருந்து ஒதுங்கிய பத்தினம்திட்டாவில் உள்ள கத்தோலிக்க கல்லூரியில் ஆசிரியையாக பணியாற்றினார். அதன் பின் பத்திரிக்கை துறையில் பணியாற்றிய இவர் தொலைக்காட்சி நெறியாளராகவும் இருந்துள்ளார். 2012-ம் ஆண்டு நடந்த அமெரிக்க ஜனாதிபதி தேர்தலை பதிவு செய்ய தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து இந்திய பத்திரிக்கையாளர்களில் இவரும் ஒருவர். இதற்காக சிறந்த செய்தி வழங்குநர் என்ற விருதும் இவருக்கு வழங்கப்பட்டது.

இந்த சூழ்நிலையில் மீண்டும் தீவிர அரசியலுக்கு திரும்பிய அவர் ஆரண்முலா தொகுதியில் சிபிஎம் கட்சி வேட்பாளராக களமிறங்கினார். காங்கிரஸின் கோட்டையாக கருதப்பட்ட இந்த தொகுதியில் 7000 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளரை தோற்கடித்தார். அதைத் தொடர்ந்து 2021 தேர்தலிலும் அதே தொகுதியில் வெற்றிபெற்றார்.

அமைச்சரவையில் புதியவர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்ற கட்சியின் தீர்மானத்தால் சைலஜா டீச்சரை போன்ற திறமையான நபரை சிபிஎம் தலைமை தேடிய போது அவர்களுக்கு கிடைத்தவர் தான் வீணா ஜார்ஜ். பத்திரிக்கை துறையில் நீண்ட அனுபவம் கொண்டவர் என்பதால் தான் சைலஜா டீச்சரின் இடத்துக்கு நியமிக்கப்பட்டுள்ளார். இனி பொறுத்திருந்து பார்த்தால் தான் தெரியும் அவரின் ஆளுமை திறன் என்னவென்று. காத்திருப்போம்..!