தமிழகத்தை தாக்குமா ‘யாஸ்’ புயல்… தயார்நிலையில் இருக்க மத்திய அரசு எச்சரிக்கை!!

தமிழகத்தை தாக்குமா ‘யாஸ்’ புயல்… தயார்நிலையில் இருக்க மத்திய அரசு எச்சரிக்கை!!

யாஸ் புயலை எதிர்கொள்ள தேவையான முன்னேற்பாடுகளை செய்யும்படி, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

வங்கக் கடலில் வடக்கு அந்தமான் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. இது நாளை மறுதினம் புயலாக மாறி ஒடிசா – மேற்கு வங்கம் இடையே வரும் கரையை கடக்க உள்ளது. இந்தநிலையில் இந்த புயலுக்கு ‘யாஸ்’ என இந்திய வானிலை ஆய்வு மையம் பெயரிட்டுள்ளது.

இந்த புயலானது வருகிற 26ம் தேதி கரையை கடக்கவுள்ளது என்பதால், ஒடிசா மற்றும் அதன் அருகே உள்ள மாநிலங்களுக்கு முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காற்றின் திசை மாறும் பட்சத்தில், தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் கனமழையாக பெய்யலாம்.

இதையடுத்து அத்தியாவசிய மருந்துகள் கையிருப்பு உள்ளிட்ட அனைத்து விதமான மருத்துவ முன்னேற்பாடுகளையும் செய்து கொள்ளுமாறு தமிழகம், ஆந்திரா, ஒடிசா, மேற்கு வங்கம், அந்தமான் தீவுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.