PSBB பாலியல் கேஸை விசாரிக்க கூடாதா? இதெல்லாம் என்ன ஜென்மம்மனே தெர்லயே... இதென்ன இவ்வளவு வக்கிரமா மாறிக்கிட்டு இருக்கு? வெச்சு வெளுக்கும் நெட்டிசன்ஸ்

PSBB பாலியல் கேஸை விசாரிக்க கூடாதா? இதெல்லாம் என்ன ஜென்மம்மனே தெர்லயே... இதென்ன இவ்வளவு வக்கிரமா மாறிக்கிட்டு இருக்கு? வெச்சு வெளுக்கும் நெட்டிசன்ஸ்

மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்துவதற்கு பதிலாக, மத்திய அரசு சி.ஆர். பி.எஃப் மற்றும் பி.எஸ்.எஃப் மத்திய படைகளை மதுரைக்கு அருகிலுள்ள மூன்று மாவட்டங்களுக்கு அனுப் பி வைக்க வேண்டும் என்ற பாஜக மூத்த தலைவர் சுப் பிரமணியன் சாமியின் கருத்துக்கு ட்விட்டரில் பலர் விமர்சித்து வருகிறார்கள். 

தமிழகத்தில் புதிதாக அமைந்துள்ள திமுக தலைமையிலான அரசு குறித்து கடந்த சில நாட்களாகவே சுப் பிரமணியன் சுவாமி பல்வேறு கருத்துக்களை வெளியிட்டு வருகிறார். பத்மா சேஷாத்ரி பள்ளி விவகாரத்தில், தமிழக அரசு உள்நோக்கத்தோடு செயல்படுவதாகத் தெரிய வந்தால், தமிழக அரசு கலைக்கப்படும் என்று ட்விட்டரி கருத்து தெரிவித்து பரபரப்பு ஏற்படுத்தினார். தமிழகத்தில் புதிய ஆட்சி தொடங்கிய சில நாட்களிலேயே அது, ஜெர்மனியின் நாஜி ஆட்சியை நினைவுபடுத்துவதாக உள்ளது என்றும் கூறியிருந்தார்.


இந்நிலையில், இன்று காலை அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், 2019ம் ஆண்டுக்கு முந்தைய காஷ்மீர் வகை தேசிய எதிர்ப்பு எழுச்சியின் அச்சுறுத்தலில் தமிழகம் இன்று உள்ளது. தமிழக முதல்வர் இது தொடர்பாக ரா அமைப்பு, உளவுத் துறைக்கு ஆவணம் வழங்க வேண்டும் .மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்துவதற்கு பதிலாக, மத்திய அரசு சி.ஆர். பி.எஃப் மற்றும் பி.எஸ்.எஃப் மத்திய படைகளை மதுரைக்கு அருகிலுள்ள மூன்று மாவட்டங்களுக்கு அனுப் பி வைக்க வேண்டும்' என்று பதிவிட்டுள்ளார்.

அவரின் இந்த ட்விட்டர் பதிவுக்கு ட்விட்டர் வாசிகள் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். அதில் சில பதிவுகள் "அருண் ஜெட்லி, நிர்மலா சீதாராமன்னு எவ்வளவோ கழுவி ஊத்தியும் பார்த்தாரு ட்விட்டர்ல ஒரு பயலும் கண்டுக்கல.ஏதாவது ஒரு அமைச்சர் பதவி கொடுங்கடான்னு எவ்வளவோ கேட்டுப் பார்த்தாரு.. 
பாவம் பரிதாபகரமான நிலைமை" என்று கூறியுள்ளார்.


"கோடிக்கணக்கான மக்கள் வாரக்கணக்கில் தேர்தல் பிரச்சாரங்களை கேட்டு அதன் பிறகு  வரிசையில் நின்று வாக்களித்து ஒரு அரசை உருவாக்குகிறார்கள். அப்படிப்பட்ட அரசை,  ஆட்சி கலைப்பு என அசால்ட்டாக ஒருவன் பேசுகிறான் என்றால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி என் மயிருக்கு சமானம் என்ற திமிர்த்தனம் இருக்கவேண்டும்" என்று கூறியுள்ளார். 


"யாரிடமும் இல்லாதது தங்களிடம் மட்டுமே இருக்கிறது என்று "உயர்ரக" நினைப்பு ஒரு கும்பலுக்கு வருமேயானால் அந்த அந்த கும்பலை விமர்சிக்க நாகரீகம் எல்லாம் பார்க்க வேண்டும் என்று அவசியமில்லை" எனக் கூறியுள்ளார்.