என்.ஆர்.காங்கிரஸ்-பாஜக இடையே கருத்து வேறுபாடுகள் இல்லை…சபாநாயகர் விளக்கம்!

என்.ஆர்.காங்கிரஸ்-பாஜக இடையே கருத்து வேறுபாடுகள் இல்லை…சபாநாயகர் விளக்கம்!

புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.

பாஜக கோரிக்கை

இந்நிலையில் பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதிகளில் மக்கள் பணிகள் சரிவர நடைபெறவில்லை என்றும் முதலமைச்சர் ரங்கசாமியை மாற்ற வேண்டுமென பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

கருத்து வேறுபாடு

இதற்கு என்.ஆர்.காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் பாஜக சட்டமன்ற உறுப்பினர்களிடையே  கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டது. இந்நிலையில் இவ்விவகாரம் தொடர்பாக சட்டபேரவை வளாகத்தில் சபாநாயகர் செல்வம் தலைமையில் அமைச்சர்கள், என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் பாஜக சட்டமன்ற உறுப்பினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

கூட்டணியில் குழப்பம் இல்லை

இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக பேச்சுவார்த்தை நடைபெற்றதை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சபாநாயகர் செல்வம், அதிகாரிகள் சரியாக செயல்படாததன் காரணமாக பல்வேறு தொகுதிகளின் மக்கள் பணிகள் நடைபெறவில்லை என தெரிவித்த அவர் சரியாக செயல்படதாக அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். என்.ஆர்.காங்கிரஸ்-பாஜக கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை என்றும் தெரிவித்த அவர் இனி வரும் காலங்களில் கூட்டணி கட்சியினரை விமர்சிக்காமல் சட்டமன்ற கட்சித் தலைவர் மூலமாக  பிரச்சினைகளை தெரிவிக்க வேண்டுமென சட்டமன்ற உறுப்பினர்களிடம் அறிவுறுத்தி உள்ளதாகவும் தெரிவித்தார்.