மருந்து பற்றாக்குறையை போக்க வேண்டும்-புதுச்சேரி அதிமுக கோரிக்கை!

தற்போது இந்த மருத்துவமனையில் போதிய மருந்துகள் இல்லாமல் மருத்துகள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

மருந்து பற்றாக்குறையை போக்க வேண்டும்-புதுச்சேரி அதிமுக கோரிக்கை!

புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனையில் நிலவும் மருத்து பற்றாக்குறையை போக்க துணைநிலை ஆளுநர் தமிழிசை, முதல்வர் ரங்கசாமி மத்திய அரசிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுகவின் அன்பழகன் வலியுறுத்தி உள்ளார்.

மருந்து பற்றாகுறை

அதிமுக புதுச்சேரி தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த கிழக்கு மாநில செயலாளர் அன்பழகன்தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள பல மருத்துமனைகள் கைவிட்ட நிலையில் நோயாளிகள் புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனையை நாடி வருகின்றனர். ஆனால் தற்போது இந்த மருத்துவமனையில் போதிய மருந்துகள் இல்லாமல் மருத்துகள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

புதுவை அதிமுக கோரிக்கை

மருத்துவமனையில் மருந்து பற்றாகுறை நிலவுவது கவலையளிக்கும் விதமாக உள்ளது.  இவ்விவகாரம் தொடர்பாக துணை நிலை ஆளுநர் தமிழிசை, முதலமைச்சர் ரங்கசாமி டெல்லி சென்று ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சரை நேரில் சந்தித்து ஜிப்மர் மருத்துவமனையில் உள்ள மருந்து பற்றாக்குறையை போக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.