புதுச்சேரி மாநிலத்தை பாஜகவினர் கலவர பூமியாக்கி வருகிறார்கள்-எதிர்க்கட்சித் தலைவர் குற்றச்சாட்டு!

புதுச்சேரி மாநிலத்தை பாஜகவினர் கலவர பூமியாக்கி வருகிறார்கள்-எதிர்க்கட்சித் தலைவர் குற்றச்சாட்டு!
Published on
Updated on
1 min read

சட்டமன்றத்தில் உள்ள எதிர்கட்சித் தலைவர் அலுவலகத்தில்  செய்தியாளர்களை சந்தித்த அவர், புதுச்சேரி மாநில அரசு துறைகளில் காலியாக உள்ள உதவியாளர் பதவிக்கு நேரடியாக பணி நியமனம் செய்ய புதுச்சேரி அரசு முடிவு செய்துள்ளது.

இது புதுச்சேரி மாநிலத்தில் படித்து பட்டதாரியாக உள்ள இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை தடுக்கும் செயலாகும் என்றும், தற்போது பணியில் இருக்கும் இளநிலை மற்றும் முதுநிலை எழுத்தர் பதவியில் உள்ளவர்களை பதவி உயர்வு மூலம் அரசு உதவியாளர் பதவியை நிரப்ப வேண்டும் என வலியுறுத்தினார்.

தந்தை பெரியார் திராவிடக்கழகத்தினர் காவல் துறை அனுமதி பெற்று  மனு சாஸ்திரத்தை எரித்து போராட்டம் நடத்திய நிலையில், அந்த போராட்டத்தில் பாஜகவினர் புகுந்து தாக்குதல் நடத்தியது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

அமைதியாக இருக்கும் புதுச்சேரியை கலவர பூமியாக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும், மேலும் பாஜகவை சேர்ந்த ஆட்சியாளர்களின் நிர்ப்பந்தத்தின் பேரில் ஜனநாயக முறையில் போராட்டம் நடத்தியவர்கள் மீது ஜாமினில் வெளியிடமுடியாதபடி வழக்குப்பதிவு செய்யப்போவதாக தெரிகின்றது. இது போன்ற பொய் வழக்குகளை காவல்துறையினர் தவிர்ப்பது புதுச்சேரியின் அமைதியை பாதுகாக்கும் என சிவா தெரிவித்துள்ளார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com