இந்தியாவிற்குள் மீண்டும் வரும் பப்ஜி கேம்

இந்தியாவில் புதிய வடிவிலான பப்ஜி கேமை நாளை பப்ஜி நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ளது.

இந்தியாவிற்குள் மீண்டும் வரும் பப்ஜி கேம்

இந்தியாவில் புதிய வடிவிலான பப்ஜி கேமை நாளை பப்ஜி நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ளது.

லடாக் எல்லை பிரச்சனை தொடர்பாக இந்திய மற்றும் சீன ராணுவத்தினர் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த விவகாரத்தைத் தொடர்ந்து முதற்கட்டமாக மத்திய அரசு 59 சீன செயலிகளுக்கு தடைவிதித்தது. இதனை தொடர்ந்து, பப்ஜி கேம், ஆப் லாக், மியூசிக் எம்பி3 ப்ளேயர், வெப் பிரவுசர் உள்ளிட்ட மேலும் 118 சீன செயலிகளுக்கு மத்திய தொழில்நுட்பத்துறை தடை விதித்தது. இதனால் பப்ஜி கேம் இந்தியாவில் விளையாட தடை விதிக்கப்பட்டது.

இந்த நிலையில், இந்தியாவில் புதிய வடிவிலான பப்ஜி கேமை நாளை அந்த நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ளது. அதன்படி, இந்தியாவிற்குள் மீண்டும் பப்ஜி கேமை கொண்டு வர அந்த நிறுவனம் நடவடிக்கை மேற்கொண்டது. இதற்காக பேட்டில் கிரவுண்ட் மொபைல் இந்தியா என்ற புதிய செயலியை இந்தியாவில் நாளை அறிமுகம் செய்யவுள்ளது.  இதன் மூலம் நாட்டில் பப்ஜி கேம் மீண்டும் நுழையவுள்ளது குறிப்பிடத்தக்கது.