20 லட்சம் கொடுத்தால் தான் உடலை கொடுப்போம்,.. கறார் காட்டிய மருத்துவமனை,.அடித்து நொறுக்கிய உறவினர்கள்,..  

20 லட்சம் கொடுத்தால் தான் உடலை கொடுப்போம்,.. கறார் காட்டிய மருத்துவமனை,.அடித்து நொறுக்கிய உறவினர்கள்,..  

வம்சி என்றவர் கொரோனா பாதிப்பால் ஹைதராபாத் பஞ்சாகுட்டா பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு 16 நாட்கள் தொடர் சிகிச்சை நடந்துவந்துள்ளது. சிகிச்சை நடந்துவந்த காலத்தில் சிகிச்சை கட்டணமாக 4 லட்ச ரூபாயை அவரது குடும்பத்தினரிடமிருந்து தனியார் மருத்துவமனை வாங்கியுள்ளது. 

ஆனால் சிகிச்சை பலனின்றி வம்சி உயிரிழந்தார். இதனால் அவரது உடலை பெற்றுச்செல்ல அவரது குடும்பத்தினர் வந்தபோது சிகிச்சைக்காக இன்னும் 20 லட்ச ரூபாயை செலுத்தி விட்டு உடலை பெற்றுச்செல்லுங்கள் என மருத்துவமனை சார்பில் கூறப்பட்டுள்ளது.  

இதை கேட்டதும் ஆவேசமடைந்த வம்சியின் உறவினர்கள் மருத்துவமனை நிர்வாகம் முன் குவிந்து மருத்துவமனையை கண்டித்து கோசம் எழுப்பினர். அப்போது ஆவேசமடைந்த சிலர் மருத்துவமனையில் பொருத்தப்பட்டிருந்த கண்ணாடி மற்றும் பர்னிச்சர்களை அடித்து உடைத்தனர்.

மேலும் வம்சிக்கு தேவையின்றி 6 ஸ்டிராய்டு ஊசிகள் போட்டதால் தான் தன சகோதரன் இறந்தான் என்றும், அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் குறை இருந்ததால் தான் அவரது உறுப்புகள் செயலிழந்து உயிரிழந்தார் என வம்சியின் சகோதரி குற்றம்சாட்டியுள்ளார். இந்த சம்பவங்களை தொடந்து கூடுதல் கட்டணம் ஏதும் செலுத்தாமல் வம்சியின் உடலை எடுத்துசெல்லுமாறு மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது.