பிளஸ் 2 தேர்வு ரத்து... மாணவர்கள் குஷி... எங்கேனு தெரியுமா?

பிளஸ் 2 தேர்வு ரத்து...  மாணவர்கள் குஷி... எங்கேனு தெரியுமா?

பிளஸ் 2 பொதுத்தேர்வை ரத்து செய்வதாக உத்தரபிரதேச அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

கொரோனா வைரஸ் பெருந்தொற்றின் முதல் அலையை விட இரண்டாவது அலையில் அதிகளவிலான பாதிப்புகளை சந்தித்து வருகிறது.  இதன் காரணமாக சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு தேர்வுகள் நடைபெறவில்லை.இந்த நிலையில், சிபிஎஸ்இ பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்தார்.

இந்நிலையில், மாநில பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு ரத்து செய்வது குறித்து அந்தந்த மாநிலங்கள் ஆலோசித்து முடிவெடுத்து வருகின்றன. அதனைத் தொடர்ந்து  கொரோனா பரவல் காரணமாக உத்தர பிரதேசத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக துணை முதலமைச்சர்  தினேஷ் சர்மா அறிவித்தார்.  

முன்னதாக அரியானா, கோவா குஜராத், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், உத்தரகாண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் பிளஸ் 2 தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.