அதிகாரிகள் அலட்சியம்...விவசாயிகள் வேதனை!

கடந்த ஐந்து ஆண்டுகாலமாக விவசாயிகளுக்கு வழங்கப்பட வேண்டிய காப்பீடு வழங்கப்படவில்லை என்றும் இந்திய ஒன்றிய அரசின் வேளாண் துறை அமைச்சர் தலையிட்டு வழங்க வேண்டும் என ஒன்றிய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

அதிகாரிகள் அலட்சியம்...விவசாயிகள் வேதனை!

காரைக்காலில் அதிகாரிகளின் அலட்சியத்தால் குறுவை சாகுபடி செய்த நெல்களை எங்கு எடுத்து செல்வது என தெரியாமல் விவசாயிகள் கூறினர்.

விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம்

காரைக்காலில் மாவட்ட ஆட்சியர் முகம்மது மன்சூர் தலைமையில் விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் நடைப்பெற்றது. இக்கூட்டத்தில் காரைக்கால் மாவட்டத்தைச் சேர்ந்த  100க்கும் மேற்ப்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியர் முகம்மது மன்சூர் நிறைய குறைகளுடன்தான் உங்களை சந்தித்துள்ளோம். குறைகள் எதுவாயினும் தெரிவித்தால் அதனை சரிசெய்வதற்கு புதுச்சேரி அரசுடன் பேசி நிவர்த்தி செய்யபடும் என கூறினார். மேலும் விவாசாயிகள் தரப்பில் பல்வேறு குறைகள் முன் வைக்கப்பட்டன.

அதிகாரிகள் அலட்சியம்

கூட்டத்தின் முடிவில் செய்தியார்களை சந்தித்த காரைக்கால் கடைமடை விவசாய சங்கத்தின் தலைவர் சுரேஷ் காரைக்காலில் வேளாண்துறை, வட்டார வளர்ச்சித் துறை மற்றும் பொதுபணி துறை அதிகாரிகளின் அலட்சியத்தால் காரைக்கால் மாவட்டத்தில் விவசாயம் அழிந்துவிடும் நிலை உள்ளதாக கூறினார்.

தற்போது குறுவை சாகுபடி செய்த நெல்களை எங்கு எடுத்துச் செல்வது என தெரியாமல் விவசாயிகள் தவிப்பதாகவும் தெரிவித்த அவர் கடந்த ஐந்து ஆண்டுகாலமாக விவசாயிகளுக்கு வழங்கப்பட வேண்டிய காப்பீடு வழங்கப்படவில்லை என்றும் இந்திய ஒன்றிய அரசின் வேளாண் துறை அமைச்சர் தலையிட்டு வழங்க வேண்டும் என ஒன்றிய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் கடைமடை பகுதியில் விவசாயம் பெருக வேண்டும் என்றால் அதிகாரிகள் கடைமடை பகுதிகளுக்கு நேரடியாக சென்று பார்வையிட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.