வெறும் 22 % பள்ளிகளில் மட்டுமே இணைய வசதி..ஆய்வில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்.! 

வெறும் 22 % பள்ளிகளில் மட்டுமே இணைய வசதி..ஆய்வில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்.! 

2019-20 கல்வியாண்டில், 22 சதவீதம் பள்ளிகளில் மட்டுமே இணையதள வசதி ஏற்படுத்தப்பட்டிருந்ததாக மத்திய கல்வித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

கொரோனா முதல் அலை பரவிய 2020ம் ஆண்டிலிருந்து பள்ளிகள் மூடப்பட்ட நிலையில் உள்ளன. ஆனால் மாணவர்களிடம் கல்வி அறிவை பெருக்கும் விதமாக ஆன்லைன் வாயிலாக வகுப்புகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.  சில பள்ளிகளில் ஆசிரியர்கள் நேரடியாக பள்ளிகளுக்கு வந்து வகுப்புகளை நடத்துகின்றனர்.  

இந்நிலையில், இந்தியாவில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் கடந்த 2019-20 கல்வியாண்டில் 22 சதவீதம் மட்டுமே இணையதள வசதி இருந்ததாக ஒருங்கிணைந்த மாவட்ட தகவல் அமைப்பு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வில்   12 சதவீதம் அரசு பள்ளிகளில் மட்டுமே இணைய வசதி இருந்ததாகவும்,அங்கு 30 சதவீதத்துக்கும் அதிகமான கணிணிகள் செயலற்ற நிலையில் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயத்தில் தமிழகத்தில் அரசு பள்ளிகளை விட தனியார் பள்ளிகளில் 77 சதவீதம் கணினி வசதிகள் ஏற்படுத்தப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.