நல்ல நாள், நல்ல நேரம் பார்த்தே ரங்கசாமியிடம் பேசுவோம்,.! பாஜக நமச்சிவாயம் பேட்டி.! 

நல்ல நாள், நல்ல நேரம் பார்த்தே ரங்கசாமியிடம் பேசுவோம்,.! பாஜக நமச்சிவாயம் பேட்டி.! 

புதுச்சேரியில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற மே 7ஆம் தேதி, என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி முதல்வராக பதவியேற்றுக்கொண்டார். இவரை தொடர்ந்து எம்.எல்.ஏ,கள் மற்றும் நியமன எம்.எல்.ஏ,கள் கடந்த 26 ஆம் தேதி பதவியேற்றுக்கொண்டனர். ஆனால் இதுவரை அமைச்சர்கள் யாரும் பதவியேற்காததால் புதுச்சேரி அரசியல் இன்னும் முழுமையடையவில்லை.  

இதற்கு காரணம் பாஜக துணை முதல்வர் உட்பட மூன்று அமைச்சர்கள், சபாநாயகர் அல்லது துணைச் சபாநாயகர் பதவிகளைக் கேட்பதும், அதற்கு ரங்கசாமி மறுப்பதும் என்றுமே கூறப்பட்டது.  

இந்நிலையில் பாஜக சட்டமன்ற கட்சி தலைவர் நமச்சிவாயம் செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது பேசிய அவர் "கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்கள் வெளியே வருவதால் மற்றவர்களுக்கும் தொற்று பாதிக்கும் எனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் வீட்டிலேயே தனிமைபடுத்தி கொள்ள வேண்டும் என இரு கரம் கூப்பி கேட்டுக் கொள்கிறேன்.

கொரோனாவின் மூன்றாவது அலை வருவதற்கான சூழ்நிலை இருப்பதால் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். தொற்று பாதிக்கப்பட்டவர்கள் கடைசி நேரத்தில் மருத்துவமனைக்கு செல்லாமல், ஆரம்ப கட்டத்திலேயே சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.

முதலமைச்சர் ரங்கசாமி ஆன்மிகத்தில் அதிக ஈடுபாடு கொண்டவர், நல்ல நாள், நல்ல நேரம் பார்த்து பேச்சுவார்த்தை தேதியை சொல்வார்.அமைச்சரவை பங்கீடு குறித்து முதலமைச்சருடன் பேசி சுமூக முடிவு எடுத்து வெகு விரைவில் முதலமைச்சர் தலைமையில் நல்லாட்சி கொடுப்போம்.பாஜக மற்றும் என் ஆர் காங்கிரஸ் இடையே எந்த வித குழப்பமும் இல்லை, சுமுகமாக தீர்வு எட்டப்படும்" எனக் கூறினார்.