நாடு இருக்கும் நிலையில் எப்படி இவரால் பொய் சொல்லமுடிகிறது..? மோடியை வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள்,..!  

நாடு இருக்கும் நிலையில் எப்படி இவரால் பொய் சொல்லமுடிகிறது..? மோடியை வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள்,..!  

இரு நாட்களுக்கு முன் பிரதமர் நரேந்திர மோடி பாஜக அரசின் 7 ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி மான் கி பாத் நிகழ்ச்சியில் உரையாற்றினார். அப்போது பேசிய அவர் "மத்தியில் பா.ஜ.க. ஆட்சியின் 7 ஆண்டுகளில் ‘நாடு பெருமைமிக்க தருணங்களை அனுபவித்தது" என்று கூறியிருந்தார். மேலும் உள்துறை அமைச்சர் "7 ஆண்டுகளில் பின்தங்கிய மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தி, தனது வலுவான தலைமையால் இந்தியாவை சக்திவாய்ந்த நாடாக பிரதமர் மோடி மாற்றியுள்ளார்" என்று புகழ்ந்திருந்தார். 

இதைத் தொடர்ந்து 7 ஆண்டுகளில் பாஜகவின் தோல்விகளை கூறி மோடியையும் பாஜகவையும் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். அதிலும் பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி போன்றவற்றால் இந்தியாவில் ஏற்பட்ட பாதிப்பையும் கூறி விமர்சித்து வருகிறார்கள்.  

இந்நிலையில் நேற்று தேசிய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் நாட்டின் மொத்த உள்நாட்டு வளர்ச்சி 2020-2021 ம் ஆண்டில் -7.3% மாக வீழ்ச்சி அடைந்துள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது சுதந்திர இந்தியாவின் வரலாற்றிலேயே இல்லாததாகும். நாட்டின் வளர்ச்சி கடந்த சில ஆண்டாகவே சரிந்து வந்தாலும் தற்போதைய சரிவு மிக மோசமானதாக பதிவாகியுள்ளது.  மொத்த உள்நாட்டு வளர்ச்சி 2018-19 ல் 7% மாகவும், 2019-20 ல் 4.5% மாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது. 

ஏற்கனவே மோடியை விமர்சித்துக்கொண்டிருந்தவர்களுக்கு புள்ளியியல் அலுவலகம் வெளியிட்ட இந்த அறிவிப்பு பெரும் வாய்ப்பாக அமைந்துள்ளது. மேலும் கொரோனா காலத்தில் மட்டும் அல்ல, கொரோனா வரும் முன்பே இந்திய பொருளாதாரம் வீழ்ச்சியை தான் சந்தித்து வருகிறது என்றும், மோடியின் தவறான பொருளாதார கொள்கையால் தான் நாடு இந்த வீழ்ச்சியை சந்தித்து வருவதாகவும், ஆனால் மோடி, அமித்ஷா ஆகியோர்  பாஜக வந்தபின் தான் நாடு வளர்ச்சி அடைகிறது என்று சொல்கிறார்கள் என்று சமூகவலைத்தளங்களில் பேசி வருகிறார்கள்.