போராளி அமைப்புடன் இந்திய அரசு பேச்சுவார்த்தை!

போராளி அமைப்புடன் இந்திய அரசு பேச்சுவார்த்தை!

ஹய்னிடிரெப் தேசிய விடுதலை கவுன்சிலின் தலைவர்கள் ஆகஸ்ட் 25 அன்று மேகாலயா வந்துள்ளனர். எச்.என்.எல்.சி அமைப்பிற்கும் அரசாங்கத்துக்கும் இடையே அமைதிப் பேச்சுவார்த்தைகள் தொடங்குவதற்கான செயல்முறையின் ஒரு படி இது என்று அந்த அமைப்பின் பிரதிநிதியும் ஹைனிட்ரெப் தேசிய இளைஞர் முன்னணி தலைவருமான சடோன் உறுதிப்படுத்தினார். அவர்களுடன் பேச்சுவார்த்தைக்கு நியமிக்கப்பட்டுள்ள பி.எஸ்.டகாரை சந்தித்துள்ளனர்.

எச்.என்.எல்.சி. போராளிகள்

ஹய்னிடிரெப் தேசிய விடுதலை கவுன்சில்(எச்.என்.எல்.சி) அமைப்பு வடகிழக்கு பகுதியான மேகாலயாவில் பெரும்பான்மையாக உள்ள காசி மற்றும் ஜைன்டி பழங்குடி மக்களின் நலன்களுக்காக போராடி வரும் அமைப்பு ஆகும். இந்த பழங்குடி மக்கள் அசாமிலும் பங்களாதேஷ் நாட்டிலும் வாழ்கின்றனர். இதன் தலைமை பங்களாதேஷ் நாட்டின் காடுகளில் தங்கியிருப்பதாக கூறப்படுகிறது.

தடை செய்யப்பட்ட இந்த கிளர்ச்சி அமைப்பின் தலைவர்கள் அமைதி நடவடிக்கைகளை விரைவுபடுத்துவதற்கான பேச்சுவார்த்தைக்கு வருவதற்கு மத்திய மற்றும் மாநில அரசாங்கங்கள் பாதுகாப்பான வழிகளை ஏற்படுத்துவதாக கூறிய பின்னர் இது சாத்தியமானதாக கூறப்படுகிறது.

மூன்று தரப்பு பேச்சுவார்த்தை

ஆகஸ்ட் 2 அன்று, எச்.என்.எல்.சி அமைப்பின் தலைமை, அதன் துணைத் தலைவர் மற்றும் வெளியுறவு செயலாளருக்கு இந்திய அரசு, மேகாலயா அரசு மற்றும் அமைப்புக்கு இடையே நடந்து வரும் முத்தரப்பு அமைதிப் பேச்சுவார்த்தையில் பங்கேற்க அங்கீகாரம் அளித்தது.

அதனைத் தொடர்ந்து எச்.என்.எல்.சி அமைப்பின் தலைவர்கள் மேகாலயா மற்றும் இந்திய அரசுடனான பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளதாக தகவல் வெளியானது. இப்போது ​​இது பேச்சுவார்த்தைக்கான அடித்தளத்தின் அடுத்த கட்டமாகும். மேலும் அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை குறித்து அரசாங்கம் முடிவெடுப்பதைச் சார்ந்துள்ளது என கூறப்படுகிறது.  இந்த வாய்ப்பின் மூலம் நாம் முன்னேற முடியும். பேச்சுவார்த்தைக்கான நாள் இன்னும் அவர்களால் நிர்ணயிக்கப்படவில்லை  என சடோன் கூறினார்.