அரசு மருத்துவமனையை ஆய்வு செய்த புதுச்சேரி ஆளுநர்! 

அரசு மருத்துவமனையை ஆய்வு செய்த புதுச்சேரி ஆளுநர்! 
Published on
Updated on
1 min read

புதுச்சேரி அரசு மருத்துவமனைகளில் போதிய மருத்துவர்கள் மற்றும் மருந்துகள் இல்லை என எதிர்கட்சிகள் குற்றம் சாட்டி வந்தனர். இந்நிலையில் துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் அரசு பொது மருத்துவமனையை ஆய்வு செய்தார். அப்போது உள்நோயாளிகள் பிரிவு, பரிசோதனை கூடங்கள் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்ளிடம் குறைகளை கேட்டறிந்தார்.  

மக்களின் நம்பிக்கையே அரசு மருத்துவமனை தான்

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் வரும் நோயாளிகளை உறவினர்கள் இறக்குகின்றனர். அதனை நேரடியாக பார்த்தேன். சாமானிய மக்களின் நம்பிக்கையே அரசு மருத்துவமனைதான். அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் சிகிச்சை மேலும் மேம்படுத்தப்படும். அதில் உள்ள குறைபாடுகள் சரிசெய்யப்படும். 

மருத்துவமனை ஊழியர் மீது நடவடிக்கை

நேற்று ரயில் நிலையத்தில் குழந்தை சிகிச்சை அளிக்க ஆம்புலன்சில் ஸ்டெக்ச்சர் எடுத்த செல்லாதது தவறு தான். அந்த ஊழியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் 3 மாதத்தில் அரசு மருத்துவமனைகளில் உள்ள அனைத்து பிரச்சினைகளையும் சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.உடனடியாக சரி செய்யப்பட வேண்டியவைகள் சரி செய்யப்படும் என்றும் தெரிவித்தார். 

ஸ்கேன் நடுவத்தில் ஆய்வு

ஆய்வின்போது பெண்மணி ஒருவர் அவரது கணவருக்கு 3 நாட்களாக ஸ்கேன் எடுக்கவில்லை என தெரிவித்த நிலையில்   அவசர சிகிச்சை பிரிவில் உள்ள அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் மையத்தை ஆய்வு செய்வதற்காக துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் சென்றார். அப்போது அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் மையம் பூட்டப்பட்டு, அதன் சாவியை ஊழியர்கள் வீட்டுக்கு எடுத்து சென்றது தெரியவந்தது.  இதனையடுத்து ஸ்கேன் பரிசோதனை மையத்தையே பூட்டிவிட்டு செல்லும் அளவிற்கு அலட்சியமா? என அதிகாரிகளை கடிந்து கொண்டார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com