குழந்தைகளை தாக்கும் கொரோனா 3-வது அலை? பள்ளிகள் திறப்பு குறித்து மறுபரிசீலனை செய்ங்க!

கொரோனா 3ம் அலை குழத்தைகளை பாதிக்கும் என்பதால் புதுச்சேரியில் பள்ளிகள் திறப்பு குறித்து அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என புதுச்சேரி அதிமுக சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. 

நாட்டில் கொரோனாவில் இரண்டாம் அலை தீவிரமடைந்ததால் அந்த அந்த மாநிலங்கள் ஊரடங்கை அமல்படுத்திக்கொள்ளலாம் என மத்திய அரசு அறிவுறுத்தியது. இதையடுத்து தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு கொரோனா பரவல் குறைந்ததை அடுத்து ஊரடங்கில் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் நாட்டில் கொரோனாவின் இரண்டாம் அலை, டெல்டா ப்ளஸ் வைரஸ் தற்போது மீண்டும் வேகமாக பரவத்தொடங்கியுள்ளது. மேலும் மூன்றாம் அலை பீதியும் மக்களை துரத்தும் நிலையில் இந்த அலை குழந்தைகளை தாக்கும் என கூறப்படுகிறது.

இந்த நிலையில், புதுச்சேரியில் வரும் 16ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த அதிமுக கிழக்கு மாநில செயலாளர் அன்பழகன், தமிழகத்தை பின்பற்றி பள்ளி திறப்பு குறித்து முடிவு செய்ய வேண்டும் எனவும் பள்ளிகள் திறக்கப்படுவதற்கு முன்பு மாணவர்களுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.