அனைத்து கட்சி கூட்டத்துக்கு மத்திய அரசு ஏற்பாடு

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை சுமுகமாக நடத்துவது பற்றி விவாதிக்க 18-ந் தேதி அனைத்து கட்சி கூட்டத்துக்கு மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது.

அனைத்து கட்சி கூட்டத்துக்கு மத்திய அரசு ஏற்பாடு

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை சுமுகமாக நடத்துவது பற்றி விவாதிக்க 18-ந் தேதி அனைத்து கட்சி கூட்டத்துக்கு மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது.

கொரோனா பரவல் காரணமாக, கடந்த ஆண்டு 3 நாடாளுமன்ற கூட்டத்தொடர்கள் முன்கூட்டியே முடித்துக்கொள்ளப்பட்டன. கடந்த ஆண்டு நடக்க வேண்டிய குளிர்கால கூட்டத்தொடர் ரத்து செய்யப்பட்டது. இந்த ஆண்டு பட்ஜெட் கூட்டத்தொடர், 5 மாநில சட்டசபை தேர்தல்கள் காரணமாக, முன்கூட்டியே முடிவடைந்தது.

இதையடுத்து, நடப்பு ஆண்டுக்கான மழைக்கால கூட்டத்தொடர், வரும் 19-ந் தேதி  தொடங்குகிறது. ஆகஸ்டு 13-ந் தேதி வரை இந்த தொடர் நடைபெறும். இந்த நிலையில் மழைக்கால கூட்டத்தொடரை சுமுகமாக நடத்துவது பற்றி விவாதிக்க மத்திய அரசு அனைத்து கட்சி கூட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளது. இந்த கூட்டம் வரும் 18-ந் தேதி நடைபெறுகிறது.

இதில் பங்கேற்குமாறு நாடாளுமன்றத்தில் இடம்பெற்றுள்ள அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி அழைப்பு விடுத்துள்ளார். கூட்டத்தொடரை சுமுகமாக நடத்த அனைத்து கட்சிகளின் ஒத்துழைப்பை மத்திய அரசு கோரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.