மீன் விற்பனை செய்யத் தடை...சாலை மறியலில் ஈடுபட்ட பெண்கள்!

மீன் விற்பனை செய்யத் தடை...சாலை மறியலில் ஈடுபட்ட பெண்கள்!
Published on
Updated on
1 min read

புதுச்சேரியில் குபேர் அங்காடியில் மீன்கள் ஏலம் விடவும், விற்பனை செய்யவும் மாவட்ட நிர்வாகம் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

மீன் விற்பனை செய்ய தடை

நாள்தோறும் மீன் பிடித்துறைமுகங்களில் இருந்து கொண்டு வருன் மீன்களை அங்காடி முன்பு காலை நேரத்தில் ஏலம் விடுவதும் விற்பனை செய்வதும் நடைபெற்று வந்தது.

இதனால் மீன் கழிவுகளை சாலையில் விட்டுச்செல்வதால் நேரு வீதியில் துர்நாற்றம் சுகாதார சீர்கேடு ஏற்படுவதால் வரும் 1 ஆம் தேதி முதல் மீன்கள் ஏலம் விடக்கூடாது, மொத்த வியாபாரம் செய்யக்கூடாது என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டிருந்தார்.

மீனவ பெண்கள் சாலை மறியல்

இந்நிலையில் மாவட்ட ஆட்சியரின் உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மீன் விற்பனையில் ஈடுபடாமல் 500 க்கும் மேற்பட்ட மீனவ பெண்கள் நேரு வீதி மற்றும் காந்தி வீதி சாலை சந்திப்பில் மறியலில் ஈடுபட்டதால் 2 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து அங்கு வந்த போலீசார் போராட்டக்காரர்களிடம் சமாதானம் செய்து மாவட்ட ஆட்சியரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என உறுதிமொழி அளித்ததை தொடர்ந்து மீனவர்கள் கலைந்து சென்றார்கள்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com