ராணுவத்தில் இணைய ஐஐடி-யில் வெற்றிப் பெற்றதை மறைத்த விவசாயி மகன்...

ஒரு விவசாயியின் மகன், ராணுவத்தில் இணைவதற்காக, ஐஐடி-யில் தேர்ச்சி பெற்றதை மறைத்திருக்கிறார். இந்த நெகிழ்ச்சி சம்பவம் அனைவரையும் கண் கலங்க வைத்துள்ளது.

ராணுவத்தில் இணைய ஐஐடி-யில் வெற்றிப் பெற்றதை மறைத்த விவசாயி மகன்...

ராணுவத்தில் சேரக்கூடாது என்பதற்காக பலர் வ்வ்வேறு வகையில் வேலை செய்து வருவது பல படங்களில் நாம் பார்த்திருப்போம். ஆனால், ராணுவத்தில் சேருவதற்காக, தனது பட்டத்தை விட்டுக் கொடுத்த இளைஞரைக் கேள்வி பட்டதுண்டா? அதுதான் ராஜஸ்தானில் அரங்கேறியுள்ளது.

ராஜஸ்தானின் ஆல்வாரைச் சேர்ந்த ஒரு விவசாயியின் மகன் கௌரவ் யாதவ். இவர் கடினமான ஐஐடி நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றார். ஆனால் அவருக்கு அதில் விருப்பம் இல்லை போலும். தனது குடும்பத்தினரிடம் தேர்வில் வெற்றி பெற்றதை சொல்லாமல், அதற்கு பதிலாக, தேசிய பாதுகாப்பு அகாடமி (என்டிஏ) தேர்வில் தேர்ச்சி பெற வேலை செய்தார்.

மேலும் படிக்க | இளைஞர்கள் புத்தகங்கள் படிப்பதில்லையா? யார் சொன்னது - எழுத்தாளர் இமயம்

இந்நிலையில், கடந்த புதனன்று, (30 நவ.) NDA வின் பாசிங் அவுட் அணிவகுப்பில் ஜனாதிபதியின் தங்கப் பதக்கத்தை வென்றார். இது அவருக்குக் கிடைக்கும் என்று அவர் நினைக்கவில்லை. இது அவருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையில் சேர விரும்பும் இளைஞர்களுக்கான நுழைவாயில் என்டிஏ தேர்வு. தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு, நேர்காணல் மற்றும் மருத்துவ பரிசோதனைகள் உள்ளன. NDA இல் பயிற்சி மூன்று ஆண்டுகள் நீடிக்கும்.

--- பூஜா ராமகிருஷ்ணன்

மேலும் படிக்க | 15ம் ஆண்டில் தங்கர் பச்சானின் "ஒன்பது ரூபாய் நோட்டு" !!!