ஹிஜாப் இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பை வழங்குகிறதா...மூத்த வழக்கறிஞர் வாதம்!

கர்நாடக உயர்நீதி மன்றத்தின் தீர்ப்பு இந்தியாவின் பன்முகத் தன்மையை கேலி செய்கிறது என ஹிஜாப் வழக்கில் மூத்த வழக்கறிஞர் கொலின் கொன்சால்வ்ஸ் என உச்சநீதிமன்றத்தில் இன்று வாதிட்டார்.
ஹிஜாப் இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பை வழங்குகிறதா...மூத்த வழக்கறிஞர் வாதம்!
Published on
Updated on
2 min read

கர்நாடகாவில் ஹிஜாப் அணிய தடை விதித்து வழங்கப்பட்ட கர்நாட உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரான வாதம் இன்று உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது.   

ஹிஜாப் மீதான தடை

கர்நாடக மாநிலத்தில் கல்வி நிறுவனங்களில் இஸ்லாமிய மாணவர்கள் ஹிஜாப் அணிந்து வருவதற்கு விதிக்கப்பட்ட கர்நாடகா அரசின் தடையை உறுதி செய்த கர்நாடக உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்ற நீதிபதி ஹேமந்த் குப்தா மற்றும் சுதன்ஷு துலியா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணை செய்யப்பட்டு வருகிறது.

வழக்கு விசாரணை

இன்றைய தினம் வழக்கு விசாரணையின் போது மூத்த வழக்கறிஞர் கொலின் கொன்சால்வ்ஸ் இந்த விவகாரத்தில் கர்நாடக உயர்நீதிமன்றம் சர்வதேச அளவிலான முன்மாதிரிகளை புறக்கணித்ததாகவும் இஸ்லாமிய மதத்தில் ஹிஜாப் அணிவது இன்றியமையாதது என கூறப்படாததால் ஹிஜாப் அணிவது அடிப்படை உரிமை இல்லை என கர்நாடகா உயர்நீதிமன்றம் தவறாக கூறியுள்ளது என்றார்.  கர்நாடகா உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு மத உணர்வுகளை புண்படுத்துவதாகவும் மற்ற மதத்தினருக்கு இஸ்லாமிய மதத்தின் மீது தவறான எண்ணத்தை ஏற்படுத்தியதாகவும் வாதத்தை முன் வைத்தார்.

சமூக பாதுகாப்பை வழங்கும் ஹிஜாப்

ஹிஜாப் அணிவது இஸ்லாமிய பெண்களுக்கு இன்றியமையாத ஒன்று எனவும் சீக்கிய மதத்தினர் டர்பன்(தலைப்பாகை) மற்றும் கிர்பன் (கத்தி) எப்படி அவர்களுக்கு சமூக பாதுகாப்பை வழங்குகிறதோ அதே போல் தான் இஸ்லாமியர்களுக்கு ஹிஜாப் சமூக பாதுகாப்பை வழங்குவதாக தெரிவித்தார். மேலும் இஸ்லாமிய மக்கள் நீண்ட காலமாக ஹிஜாப் அணிந்து தான் வருகிறார்கள் என்பதை கவனிக்க கர்நாடக உயர்நீதிமன்றம் தவறியது எனவும், கர்நாடக அரசு ஹிஜாப் அணிய தடை விதிப்பதற்கு முன்பே இஸ்லாமிய பெண்கள் பலரும் ஹிஜாப் அணிந்தார்கள் எனவும் இந்தியாவில் பல மில்லியன் கணக்கான இஸ்லாமிய பெண்கள் காலம் காலமாக ஹிஜாப் அணிந்து தான் வருகிறார்கள் எனவும் வாதிட்டார். மேலும், ஹிஜாப் அணிவது இஸ்லாமிய மதத்தின் நடைமுறையா? என்பது தான் மிகப்பெரிய கேள்வி என்றால், காலம் காலமாக பல மில்லியன் கணக்கான இஸ்லாமிய மக்கள் ஹிஜாப் அணிந்து வருகிறார் என்பதே ஒரே பதில் என வாதாடினார்.

உரிமையை பறிக்கும் தீர்ப்பு

மேலும் "பெரும்பான்மை சமூகத்தில் இருந்து சிறுபான்மை மக்களை பார்த்து தீர்ப்பு வழங்குவது" போல கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு அமைந்துள்ளதாகவும், அரசியலமைப்பு சுதந்திரம் இல்லாத தீர்ப்பாக அந்த தீர்ப்பை பார்ப்பதாகவும் தீர்ப்பின் பக்கங்களில் பல்வேறு அதிர்ச்சிகளும், ஒருவரின் மனதை புண்படுத்தும் நோக்கிலான விஷயங்களும் இடம்பெற்றுள்ளதாக மூத்த வழக்கறிஞர் கொலின் கொன்சால்வ்ஸ் கூறினார். 

கர்நாடக உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு கலாச்சார பன்முகத்தன்மை மற்றும் சுதந்திரமான உரிமையை புறக்கணித்தது போல இருப்பதாகவும், இந்தியாவில் காலம் காலமாக உள்ள பன்முகத் தன்மையை கேலி செய்யும் வகையில் கர்நாடக உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு அமைந்ததாகவும் கூறினார். மேலும் இந்த வழக்கு 10 மாணவிகள் தொடர்ந்த வழக்கு அல்ல என்றும் ஒரு மாநிலத்தையே பாதிக்கப்பட்ட வழக்கு எனவும் உச்ச நீதிமன்றத்தில் இன்றைய வழக்கு விசாரணையின் போது மூத்த வழக்கறிஞர் கொலின் கொன்சால்வ்ஸ் கூறியுள்ளார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com