டிவிட்டர் நிறுவனம் அடாவடி: கடுப்பான ஒன்றிய அரசு!

டிவிட்டரின் வலைதள பக்கத்தில் சர்ச்சைக்குரிய இந்திய வரைப்படம் வெளியாகி உள்ளது மீண்டும் பரபரப்பை  ஏற்படுத்தி உள்ளது.

டிவிட்டர் நிறுவனம் அடாவடி: கடுப்பான ஒன்றிய அரசு!

டிவிட்டரின் வலைதள பக்கத்தில் சர்ச்சைக்குரிய இந்திய வரைப்படம் வெளியாகி உள்ளது மீண்டும் பரபரப்பை  ஏற்படுத்தி உள்ளது.

டிவிட்டர் பக்கத்தில் இந்திய வரைப்படம் சிதைந்த நிலையில் வெளியிடப்பட்டிருந்தது. ஜம்மு காஷ்மீர், லடாக் ஆகியவை வேறு நாடு என குறிப்பிடப்பட்டு இருந்ததால் சர்ச்சை ஏற்பட்டது. இந்தியாவில் ஒன்றிய அரசின் புதிய விதிமுறைகளுக்கு இணங்காமல் டிவிட்டர் நிர்வாகம் தொடர்ந்து முரண்டுபிடித்து வருகிறது. 

மேலும், ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அமைச்சரின் டிவிட்டர் கணக்கை சமீபத்தில் முடக்கி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் ஒன்றிய அரசுக்கும், டிவிட்டருக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. 

இந்நிலையில், டிவிட்டரின் வலைதள பக்கத்தில் சர்ச்சைக்குரிய இந்திய வரைப்படம் வெளியாகி உள்ளது. ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் பகுதிகள் வேறு நாடுகளுடையது என குறிப்பிடப்பட்டுள்ளது. இதைக்கண்ட  நெட்டிசன்கள் கோபத்தின் உச்சிக்கு சென்று டிவிட்டர் நிறுவனத்தை கடுமையாக திட்டி வருகின்றனர். இந்திய வரைப்படத்தை டிவிட்டர் தவறாக சித்தரிப்பது இது முதல்முறை அல்ல. 

கடந்த ஆண்டு அக்டோபரில் சீனாவின் ஒரு பகுதி லே என வெளியிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து சர்ச்சைக்குரிய லே, லடாக் வரைபடத்தை டிவிட்டர் நிறுவனம் நீக்கியது. தற்போது அமெரிக்காவை சேர்ந்த ஜெரிமி கெசல் என்பவரை குறைதீர் அதிகாரியாக டிவிட்டர் நியமித்துள்ளது. குறைத்தீர் அதிகாரி இந்தியாவை சேர்ந்தவராகதான் இருக்க வேண்டும் என்று புதிய விதிமுறைகளில்  கூறப்பட்டுள்ள நிலையில், இந்த நியமனமு ம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.