கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடிக்கும் என்று கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது.
224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு மே மாதம் 10-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. ஒரே கட்டமாக நடைபெறும் இந்த தேர்தல் முடிவுகள் மே மாதம் 13ஆம் தேதி வெளியிடப்பட உள்ளன. இதனையொட்டி தேர்தல் பிரசாரம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இதில் பாஜக, காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் ஆகிய முக்கிய கட்சிகள் தங்களது வேட்பாளர்களை களத்தில் இறக்கியுள்ளன.
இந்நிலையில் கர்நாடகத்தில் ஒரு கன்னட செய்தி தொலைக்காட்சி 'சி.ஓட்டர்' நிறுவனத்துடன் இணைந்து கருத்து கணிப்பை நடத்தியது. தற்போது கருத்து கணிப்பு விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதில் காங்கிரஸ் கட்சி தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே காங்கிரசின் வெற்றியை தடுத்து நிறுத்த பாஜக முழு பலத்துடன் தேர்தல் களப்பணி ஆற்றி வருகிறது.