கோக கோலா ஆலை கொரோனா மையமாக மாற்றம்,. மூன்றாம் அலையை சமாளிக்க மாநில அரசு முடிவு.! 

கொரோனாவின் மூன்றாம் அலையை சமாளிக்க கோக கோலா ஆலையைகொரோனா சிகிச்சை மையமாக கேரள அரசு மாற்றியுள்ளது கேரள அரசு.

கோக கோலா ஆலை கொரோனா மையமாக மாற்றம்,. மூன்றாம் அலையை சமாளிக்க மாநில அரசு முடிவு.! 

கடந்த மார்ச்சில் கொரோனா இந்தியாவுக்குள் நுழைந்தது. அப்போது முடக்கப்பட்ட இந்தியா தற்போது வரை இன்னும் மீளவில்லை. கொரோனாவின் முதல் அலை காரணமாக இந்தியாவில் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு பலர் உயிரிழந்தார்கள். கடந்த மே மாதத்தில் உச்சம் தொட்ட கொரோனா பாதிப்பு பிறகு மெதுவா குறையத்தொடங்கியது. '

இனி நாடு மீண்டு விடும் என்று எதிர்பார்க்கப்பட்ட போது உருமாற்றமடைந்த  கொரோனா வைரஸ் இந்தியாவை தாக்கியது. முதல் அலை வயதானவர்களையே அதிகம் தாக்கிய நிலையில் இரண்டாம் அலை இளைஞர்களை அதிகமாக தாக்கியது. மேலும் முதல் அலையை விட இரண்டாம் அலையால் உயிரிழப்புகளும் அதிகம் ஏற்பட்டன. 

கொரோனா இரண்டாம் அலையின் பாதிப்பு தற்போது குறைந்து வரும் நிலையில் மூன்றாம் அலை ஏற்படும் என்றும் அது குழந்தைகளை அதிகம் பாதிக்கும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கிறார்கள். இதன் காரணமாக ஒன்றிய மாநில அரசுகள் பல்வேறு முன்னேற்பாடுகளை செய்து வருகிறார்கள். 

இந்நிலையில் கொரோனாவின் மூன்றாம் அலையை சமாளிக்க கேரளத்தில் கோக கோலா ஆலையை 1 கோடி ரூபாய் செலவில் கொரோனா சிகிச்சை மையமாக கேரள அரசு மாற்றியுள்ளது. இந்த தகவலை அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.