சட்டமன்றத்தின் முதல் நாளிலேயே பாஜக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு..!  

சட்டமன்றத்தின் முதல் நாளிலேயே பாஜக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு..!  

மேற்கு வங்கத்தில் சட்டசபை கூட்டத்தொடரின் முதல் கூட்டம் நேற்று தொடங்கிய நிலையில் பாஜக எம்.எல்.ஏ-கள் அனைவரும் அவையை விட்டு வெளிநடப்பு செய்தனர். 

நடத்து முடிந்த மேற்கு வங்க சட்டமன்ற தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்தது. இதில் தேர்தல் வெற்றியை தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது. இதில் பாஜக தொண்டர்களின் வீடுகள் மற்றும் வாகனங்கள் திரிணாமுல் காங்கிரசால் சூறையாடப்பட்டதாக பாஜக குற்றம்சாட்டி வருகிறது. இதில் இருகட்சிகளும் ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். 

இதைத் தொடர்ந்து தேர்தலுக்கு பிந்தைய வன்முறை தொடர்பான வழக்கு கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில் நேற்று மேற்கு வங்க சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் தொடங்கியது. ஆளுநர் உரையுடன் தொடங்கிய இந்த கூட்டத்தில் தேர்தலுக்கு பிந்தைய வன்முறையை கண்டித்து பாஜக எம்.எல்.ஏ-கள் கடும் அமளியில் ஈடுபட்டதுடன் அவையை விட்டு வெளிநடப்பு செய்தனர்.