புதுவை சபாநாயகர் பதவி பாஜகவுக்கே,.விட்டுக்கொடுத்த ரங்கசாமி,..பாஜக தலைவர் அறிவிப்பு,.! 

புதுவை சபாநாயகர் பதவி பாஜகவுக்கே,.விட்டுக்கொடுத்த ரங்கசாமி,..பாஜக தலைவர் அறிவிப்பு,.! 

புதுச்சேரி மாநிலத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் பாஜக-என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை பிடித்தது. அங்கு முதலவராக ரங்கசாமி பொறுப்பேற்றாலும், அமைச்சர்கள் யாரும் பொறுப்பேற்கவில்லை. இதற்கு பாஜக  சார்பில் அதிக அமைச்சர்கள் கேட்கப்பட்டாகவும், சபாநாயகர்,துணை முதல்வர் போன்றவையும் கேட்கப்பட்டதாகவும், அதற்கு ரங்கசாமி சம்மதிக்கவில்லை என்றும் கூறப்பட்டது. 

இந்நிலையில் பாஜக மாநில தலைவர் சாமிநாதன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் "பாஜக சார்பில் சபாநாயகர் வேட்பாளர்  போட்டியிடுவார் என்று கூறிய அவர் கூட்டணியில் எத்தனை அமைச்சர்கள் என்பது குறித்து நாளை முடிவு எடுக்கப்படும் என்று கூறினார்.

மேலும் பாஜக-என்.ஆர்.காங்கிரஸ் ஆகிய இரண்டு கட்சிகளுக்குமே சுமூக உறவு உள்ளது என்றும் கூட்டணியில் குழப்பம் இருப்பதாக எதிர்கட்சிகள் தவறாக சித்தரித்தனர் என்றும் பாஜக-என்.ஆர் காங்கிரஸ் இடையே சுமுக உறவு எட்டிவிட்டது என்று கூறி இந்த கூட்டணி 5 ஆண்டு காலம் நல்லாட்சி கொடுக்கும் எனறு கூறினார்.