அட.. என்னப்பா! இப்படியெல்லாம் ஒரு போட்டியா?

மகாராஷ்டிராவில் பின்னோக்கிவாறு ஆட்டோவை ஓட்டும் வினோத போட்டி நடத்தப்பட்டது.

அட.. என்னப்பா! இப்படியெல்லாம் ஒரு போட்டியா?

பல வகையான போட்டிகளை நாம் அறிந்திருப்போம். அதில் சில வித்தியாசமானவையாக இருக்கும். அதுவே ஒரு சில போட்டிகள் மிகவும் வினொதமாக இருக்கும். அப்படிப்பட்ட ஒரு வினோதமான போட்டிதான் “ரிவர்ஸ் ஆட்டோ” போட்டி.

சங்கமேஷ்வரர் யாத்திரை என்ற நிகழ்வினை ஒட்டி, சங்கிலி டவுனுக்கு அருகில் உள்ள ஹரிபூர் கிராமத்தில் இந்த பின்னோக்கிவாறு ஆட்டோவை ஓட்டும் வினோத போட்டி நடத்தப்பட்டது.

மேலும் படிக்க | 65 கிடா வெட்டி 10,000 ஆண்கள் கலந்து கொண்ட அசைவ திருவிழா...

சுமார் 7 ஆட்டோ ஓட்டுநர்கள் கலந்து கொண்ட இந்த போட்டிக்காகவே இந்த ஆட்டோக்கள் சிறப்பாக மாற்றியமைக்கப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன. ஆயிரத்திற்கும் மேற்பட்ட கூட்டத்திற்கு மத்தியில் இந்த வினோத போட்டி நடைபெற்றது.

இந்த வினோத போட்டியில், ஷஷிகாந்த் பாட்டில் என்பவர், சுமார் 3 கிலோமீட்டர்களை வெறும் 3 நிமிடங்கள் 8 விநாடிகளில் மிகவும் கடினமான திருப்பங்களில் நன்றாக ஓட்டி முதல் பரிசு வென்றுள்ளார். அவருக்கு வெற்றி பதக்கம் மற்றும் 11,000 பண பரிசும் வழங்கப்பட்டது.

இப்போட்டியை இருபுறங்களிலும் கூடியிருந்த பொதுமக்கள் ஆரவாரம் செய்து உற்சாகப்படுத்தினர்.

--- பூஜா ராமகிருஷ்ணன்

மேலும் படிக்க | 62 ஆண்டு பாரம்பரியத்தைக் கடைபிடிக்க 2 கிலோ நல்லெண்ணையைக் குடித்த பழங்குடியின பெண்கள்...