ராகுல் நடைபயணம் நிறுத்தம்..! காரணம் என்ன?

ராகுல் நடைபயணம் நிறுத்தம்..! காரணம் என்ன?

இந்தியாவை  ஒன்றிணைக்கும் வகையில்14வது நாளாக பாதயாத்திரையை தொடங்கியுள்ள ராகுல் காந்தி, கேரளாவில் மக்களை சந்தித்து வருகிறார்.

ஒற்றுமை நடைபயணம்:

இந்தியா மக்களை கருத்தியல் ரீதியாக ஒன்றிணைக்கும் வகையில் ‘பாரத் ஜோடோ’ என்ற 150 நாட்கள் யாத்திரையை காங்கிரஸ் தொடங்கியுள்ளது. கடந்த 7ம் தேதி இந்த பயணத்தை தனது ஆதரவாளர்களுடன் தொடங்கிய ராகுல் காந்தி, கன்னியாகுமரியை தொடர்ந்து, தற்போது கேரளாவில் பாதயாத்திரை நடத்தி வருகிறார். அந்தவகையில் இளைஞர்கள், பெண்கள் என பல்வேறு தரப்பினரையும் சந்தித்து கருத்தியல் ரீதியாக ஒன்றிணைத்து வருகிறார். மக்களும் அவருக்கு சிறப்பான வரவேற்பளித்து வருகின்றனர்.

தலைவர் தேர்தல்:

இந்நிலையில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தல் அக்டோபர் 17 இல் நடக்கவுள்ளது. இதற்கான வேட்புமனுத்தாக்கல் இன்னும் 2 நாட்களில் தொடங்குகிறது. தலைவர் தேர்தலில் ராகுல் போட்டியிடவில்லை என கூறியுள்ளார். இதனால் நேரு கும்பம் அல்லாமல் காங்கிரசுக்கு புதிய தலைவர் வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க: காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிடும் மூத்த தலைவர்கள்...அப்போ ராகுல்காந்தி?

ராகுல் காந்தி தலைமை:

இதனிடையே, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி, காங்கிரசின் தலைவராக ராகுல் காந்தி பதவியேற்கவேண்டும் என தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. காங்கிரஸ் தலைவர் பதவிக்கு கட்சியின் இரண்டு முக்கிய நிர்வாகிகள் போட்டியிட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

நடைபயணம் நிறுத்தம்:

சிகிச்சைக்குப்பின் நாடு திரும்பிய காங்கிரஸ் இடைக்காலத்தலைவர் சோனியாகாந்தியை பார்க்கவும், கட்சியின் முக்கிய ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்கவும் வரும் 23ம் தேதி ராகுல்காந்தி டெல்லி செல்கிறார். இதற்காக ஒருநாள் மட்டும் நடைபயணத்தை நிறுத்தும் ராகுல்காந்தி, மீண்டும் 24ம் தேதி கேரளாவின் சாலக்குடியில் இருந்து நடைபயணத்தைத் தொடங்குவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் கெலாட் காங்கிரஸ் கட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட உள்ள நிலையில் புதிய முதலமைச்சராக சச்சின் பைலட் தேர்வு செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

காங்கிரஸ் தலைவர் தேர்தல்: 

அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் பதவிக்கான வாக்குப்பதிவு அக்டோபர் 17ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூர் மற்றும் ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் ஆகியோர் போட்டியிட உள்ளனர். 

ஒருவருக்கு ஒரு பதவி மட்டுமே:

உதய்பூரில் நடைபெற்ற மாநாட்டில் காங்கிரஸ் எடுத்த முடிவின்படி கட்சியில் ஒருவர், ஒரு பதவியில் மட்டுமே இருக்க முடியும் என்பதனால் தலைவர் பதவிக்கு களம் இறங்கிய அசோக் கெலாட், முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதையும் படிக்க: “நாடாளுமன்ற தேர்தலோடு சட்டமன்றத்துக்கும் தேர்தல்” நிச்சயம்...கே.டி.ராஜேந்திர பாலாஜி அதிரடி பேச்சு!

புதிய முதலமைச்சர் யார்: 

இந்த நிலையில்  ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் இன்று மாலை காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில், சச்சின் பைலட், மூத்த தலைவர்கள் மல்லிகார்ஜூன கார்கே, அஜய் மக்கான் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர். கூட்டத்தின் முடிவில் ராஜஸ்தான் மாநிலத்தின் புதிய முதலமைச்சராக சச்சின் பைலட் தேர்வாக கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

6 ஆண்டுகளுக்கு பிறகு சோனியாவை சந்திக்கும் லாலு, நிதிஷ்.. பாஜகவுக்கு எதிராக கிளம்புகிறார்களா?

பீகாரில் பாஜகவுடன் கூட்டணியில் இருந்த நிதிஷ்குமார், சமீபத்தில் விலகி காங்கிரஸுடன் கூட்டணி வைத்து மீண்டும் முதலமைச்சர் ஆனார்..!

சோனியாவை சந்திக்கும் தலைவர்கள்:

பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார், ராஷ்டிரிய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் யாதவ் ஆகியோர் காங்கிரஸ் 
இடைக்காலத் தலைவர் சோனியா காந்தியை இன்று மாலை சந்தித்து பேச உள்ளனர். 

பாஜகவுக்கு எதிராக:

தேசிய அளவில் மத்திய பாஜக அரசுக்கு எதிரான கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் ஆகியோர் ஈடுபட்டுள்ளனர். 

பாஜகவிலிருந்து விலகிய நிதிஷ்குமார்:

இந்நிலையில், பீகார் மாநிலத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகிய நிதிஷ்குமார், பா.ஜ.க.வில் இருந்து வெளியேறி காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து மீண்டும் முதலமைச்சரானார். 

 

சோனியாவை சந்திக்கும் லாலு, நிதிஷ்:

இதனையடுத்து, எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் பணியில் அவர் தீவிரம் காட்டி வரும் நிலையில், ராஷ்டிரிய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் யாதவுடன் இணைந்து, காங்கிரஸ் இடைக் காலத் தலைவர் சோனியா காந்தியை டெல்லியில் இன்று சந்தித்து பேச உள்ளனர். கடந்த 6 ஆண்டுகளுக்கு பிறகு இந்த சந்திப்பு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. 

தவறை தட்டி கேட்ட பள்ளி முதல்வருக்கு நேர்ந்த சோகம்..! மாணவரின் வெறிச்செயல்...!

உத்திரபிரதேச மாநிலத்தில் 12 ஆம் வகுப்பு மாணவன் ஒருவன் பள்ளி முதல்வரை துப்பாக்கியால் சுட்டதால் பரபரப்பு...

உத்திர பிரதேச மாநிலம், சீதாபூர் மாவட்டத்தில் உள்ள ஜஹாகிராபாத்தில் உள்ள ஒரு பள்ளியில் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் பள்ளி முதல்வரை நேற்று துப்பாக்கியால் சுட்டுள்ளான். 48 வயதான பள்ளி முதல்வர் ராம் சிங் வர்மா, வெள்ளிக்கிழமையன்று, 12 ஆம் வகுப்பு படிக்கும் இரண்டு மாணவர்கள் பள்ளியில் சண்டையிட்டு கொண்டுள்ளனர். அதற்கு பள்ளி முதல்வர் திட்டியதாக கூறப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு அந்த மாணவர், நேற்று காலை 8 மணியளவில் பள்ளி அலுவலகத்துக்கு அவர் சென்றுகொண்டிருந்தபோது அந்த மாணவன் இரண்டு முறை வயிற்றில் சுட்டுள்ளார்.   

பின்னர் அவர், ரத்த வெள்ளத்தில் சரிந்ததையடுத்து அந்த மாணவன் தப்பியோடியுள்ளான். இதனையடுத்து அவர், சீதாபூர் மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படும் நிலையில் தொடர் சிகிச்சையில் உள்ளார். இந்த சம்பவம் குறித்து, போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருவதோடு, தப்பியோடிய மாணவனையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

தலைவர் பதவிக்கான வேட்புமனுத் தாக்கல்

இந்திய காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவருக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று தொடங்கவுள்ளது.
கடந்த 2019_ ஆம் ஆண்டு தேர்தல் தோல்விக்கு பின் அன்று காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவராகயிருந்த ராகுல் காந்தி தேர்தல் தோல்விக்கு முழுப் பொறுப்பையும் தானே ஏற்றுக்கொண்டுத் தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். அதனையடுத்து 2017_ ஆம் ஆண்டிற்குப் பின்னர் சோனியா காந்தி மீண்டும் 2019_ ல் காங்கிரஸ் கட்சியின் தேசிய இடைக்காலத் தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

ராகுல் காந்தி திட்டவட்டம் 
 
ராகுல் மீண்டும் கட்சியின் தலைவராக வேண்டும் என்று அக்கட்சியின் தலைவர்கள் பலர் வலியுறுத்தி வரும் நிலையில் "நான் கட்சிக்காகவும் நாட்டு மக்களின் நலனுக்காகவும் களத்தில் நின்றுப் போராடுகிறேன் ஆனால் உறுதியாக நான் தலைவர் பதவிக்குப் போட்டியிடமாட்டேன்" என திட்டவட்டமாக ராகுல் காந்தி கூறியுள்ளார். தனது உடல்நிலை மற்றும் வயது மூப்பின் காரணமாக அடிக்கடி ஓய்வுவெடுக்க வேண்டியிருப்பதால் சோனியா காந்தியும் கட்சியின் தலைவராக முடியாது என்றுத் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க | அசோக் கெலாட், சசி தரூர் இடையே போட்டி...யார் அடுத்த காங்கிரஸ் தலைவர்?

It's not a post, but…': Rahul Gandhi's advice to Congress president  hopefuls | Latest News India - Hindustan Times 


அனல் பறக்கும் மனுத்தாக்கல்

சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் தலைவர் பதவியைத் தவிர்த்ததால் அவர்களது குடும்பத்தை சேர்ந்தவரல்லாது வேறு ஒருவர் தலைவராகப் பொறுப்பேற்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் மற்றும் பாராளுமன்ற உறுப்பினரான சசி தரூர் இருவரும் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவருக்குப் போட்டியிடுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.


யார் தேசியத் தலைவர்?

சசி தரூரும், அசோக் கெலாட்டும் தேர்தல் அறிவிப்பிற்குப் பின்னர் சோனியா காந்தியை சந்தித்துப் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளனர். இதனை அடுத்து  இருவரில் தலைவராகும் வாய்ப்பு யாருக்கு அதிகம் இருக்கிறது என்ற எதிர்ப்பார்ப்பு காங்கிரஸை சார்ந்தத் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது, எனினும் அசோக் கெலாட்டிருக்கு அதிக வாய்ப்புள்ளதாக செய்திகள் பரவி வருகிறது.


நம்பிக்கை நாயகன் 

பாஜக ஆட்சியைப் பிடித்ததிலிருந்து காங்கிரஸ் தொடர் சரிவுகளை சந்தித்து வருகிறது. உள்கட்சியில் ஏற்படும் பிரச்சனைகள், கட்சி தாவல்கள் என காங்கிரஸின் பலம் நாளுக்கு நாள் குறைந்துக் கொண்டேயிருக்கிறது. ஆபரேஷன் தாமரையை செயல்படுத்தி காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கி கர்நாடகாவிலும் மத்திய பிரதேசத்திலும் ஆட்சியைக் கைப்பற்றியது பாஜக. அதே பாணியில் ராஜஸ்தான் அரசையும் கவிழ்க்க நினைத்தது, ஆனால் அசோக் கெலாட் தனது சாமர்த்தியத்தால் அதிருப்தி எம்.எல்.ஏக்களை சமாதானம் செய்து பாஜகாவின் ஆபரேஷன் தாமரையைத் தோல்வியுற செய்தார். இதனால் ராகுல் காந்தி குடும்பத்தின் "நம்பிக்கை நாயகனாக"  அசோக் கெலாட் இருப்பதால் கட்சியின் தலைவராகும் வாய்ப்பு அவருக்கே அதிகம் உள்ளதாக அரசியல் வட்டாரங்கள்  தெரிவிக்கின்றன.

----- அறிவுமதி அன்பரசன்

கணவர்களுக்கு உறுப்பு தானம் செய்த மனைவிகள்! தலைநகரில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்!

தலைநகர் டெல்லியில், இரண்டு கணவர்களுக்கு நோய்க்கான சிகிச்சைக்கு, மனைவிகள் தங்களது உறுப்புகளை தானம் செய்து அவர்களைக் காப்பாற்றிய நெகிழ்ச்சி சம்பவம் தற்போது அரங்கேறியுள்ளது.

தனது கணவரின் சிறுநீரகத்திற்கான சிகிச்சைக்காக உறுப்பு தானம் செய்த மனைவியின் கணவரைக் காப்பாற்ற, தானும் தனடு உறுப்பை தானம் செய்த சம்பவம், தலைநகர் டெல்லியில் அரங்கேறியுள்ளது.

டெல்லியைச் சேர்ந்த இரண்டு குடும்பங்கள், இறுதி நிலை சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட தங்கள் குடும்பத்தின் ஆண் உறுப்பினர்கள் தவிப்பதைக் கண்டு கவலையில் ஆழ்ந்த நிலையில், சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அவர்களது கணவர்களுக்கு உறுப்புகள் யாருடையதும் பொருந்தாத காரணத்தால் துக்கத்தில் தத்தளித்த நிலையில், இரு குடும்பத்துக்கும் அவரவர் நிலை குறித்து தெரியவந்துள்ளது.

மேலும் படிக்க | கல்லீரலையும் நிலத்தையும் விட்டுக்கொடுத்து, குழந்தையை மீட்ட தந்தை! நெகிழ வைத்த வைரல் சம்பவம்!

இதனை அடுத்து, ஒரு மனைவி, மற்றொரு குடும்பத்திற்கு உதவி செய்ய தானம் செய்ய ஒப்புக் கொண்ட நிலையில், ஒரு ஆண் உருப்பினர் காப்பாற்றப்பட்டார். ஆனால், தனது கணவரது நிலையே இங்கு மோசமாக இருப்பதை காப்பாற்றப்பட்ட குடும்பத்திற்கு தெரிவித்ததை அடுத்து, காப்பாற்றப்பட்ட நோயாளியின் மனைவி பாதிக்கப்பட்ட மற்றொருவருக்கு உதவி செய்ய முன்வந்துள்ளார்.

மேலும் படிக்க | மாணவியின் உடலுறுப்புகள் தானம் செய்த பெற்றோர்!

அதிர்ஷ்டவசமாக யாருடையதும் பொருந்ததாத அக்கணவன்மார்களுக்கு, மற்றொருவரின் மனைவி உறுப்புகள் பொருந்தியதை அடுத்து, இரண்டு கணவர்களும் காப்பாற்றப்பட்டனர். 

'ஸ்வாப் ட்ரான்ஸ்பிளான்ட்', அதாவது, தொடர்பில்லாத இருவர், தானம் மூலம் தொடர்பு கொள்ளும் சிகிச்சை முறை முதன்முறையாக இந்தியாவில் நடைபெற்றுள்ளதை, அம்மருத்துவமனை மருத்துவர்கள் கர்வமாக தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | சாலையோரத்தில் குழந்தை பிரசவித்த பெண்...! ஆம்புலன்ஸ் சேற்றில் சிக்கியதால் பரபரப்பு..!