மழை வெள்ளத்தால் 50 லட்சம் மக்கள் பாதிப்பு! ஆனால் அசாம் முதல்வர் என்ன செய்கிறார் தெரியுமா?

அசாம் முதல்வர் ஹிமாந்த் பிஸ்வா சர்மாவோ மகாராஷ்டிராவில் இருந்து வந்துள்ள ஷிண்டே ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்களை கவனிப்பதிலேயே குறியாக உள்ளார்.

மழை வெள்ளத்தால் 50 லட்சம் மக்கள் பாதிப்பு! ஆனால் அசாம் முதல்வர் என்ன செய்கிறார் தெரியுமா?

அசாம் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழயால் மாநிலம் முழுவதும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. அசாமில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் இந்த ஆண்டு இறந்தவர்களின் எண்ணிக்கை 100க்கும் மேற்பட்டவர்கள் என தகவல்கல் கூறுகிறது.

அசாமின் 32 மாவட்டங்களில் 4 ஆயிரதிற்கும் மேற்பட்ட கிராமங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது.

தற்காலிக தங்குமிடங்கள்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்குவதற்கு 845 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் சுமார் 2லட்சத்து 70 ஆயிரம் மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர். வெள்ள நிவாரணப் பொருட்கள் வழங்குவதற்கென்று 1025 வெள்ள நிவாரண பொருட்கள் வழங்கும் மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன்.

அசாமில் ஷிண்டே

குஜராத்தில் இருந்து புறப்பட்டு தனக்கு ஆதரவளிக்கும் சட்டமன்ற உறுப்பினர்களுடன் அசாம் தலைநகரம் குவஹாத்திக்குச் சென்றுள்ளார் ஏக்நாத் ஷிண்டே. அங்கு பாஜக ஆட்சி தான் நடைபெற்று வருகிறது. அசாம் மாநில அரசின் பாதுகாப்பில் தனியார் விடுதியில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

சிவசேனா கட்சி உடையக்கூடாது என்றால் பாஜகவுடன் சிவசேனா கூட்டணி அமைக்க வேண்டும் என ஏக்நாத் ஷிண்டே அசாமில் இருந்து கொண்டு உத்தவ் தாக்கரேவுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறார்.

ஆனால் அசாம் முதல்வர் ஹிமாந்த் பிஸ்வா சர்மாவோ மகாராஷ்டிராவில் இருந்து வந்துள்ள ஷிண்டே ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்களை கவனிப்பதிலேயே குறியாக இருப்பதாகவும் வெள்ள பாதிப்பு பணிகளை கவனிப்பதில்லை என எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தியுள்ளன.

- ஜோஸ்