உத்தவ் தாக்கரேவுடன் அதானி சந்திப்பு!

அதானி குழுமம் மும்பையில் மிகப்பெரிய வணிக நலன்களைக் கொண்டுள்ளது,
உத்தவ் தாக்கரேவுடன் அதானி சந்திப்பு!
Published on
Updated on
1 min read

மகாராஷ்டிரா முன்னாள் முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவை இந்தியத் தொழிலதிபர் கவுதம் அதானி மும்பையில் வைத்து சந்தித்தார்.

சிவசேனா

சிவசேனாவின் மூத்த தலைவராக இருந்த ஏக்நாத் ஷிண்டே, 39 சட்டப்பேரவை உறுப்பினர்களுடன் பதவி விலகியதை அடுத்து உத்தவ் தாக்கரேவும் முதலமைச்சர் பதவியில் இருந்து விலக வேண்டிய சூழல் ஏற்பட்டது. தொடர்ந்து மகாராஷ்டிராவின் புதிய முதலமைச்சராக ஏக்நாத் ஷிண்டே பொறுப்பேற்றுள்ளார். இந்நிலையில் உத்தவ் தாக்கரேவை மும்பையில் வைத்து கவுதம் அதானி சந்தித்துள்ளார். சந்திப்பில் நடைபெற்ற பேச்சுவார்த்தை தொடர்பான தகவல்கள் வெளியாகவில்லை.

அதானி – தாக்கரே சந்திப்பு

சுமூகமான உறவுகளைப் கொண்டுள்ள அதானி மற்றும் தாக்கரே இடையேயான சந்திப்பு வழக்கமான ஒன்று தான் என்று சிவ சேனா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதானி குழுமம் மும்பையில் மிகப்பெரிய வணிக நலன்களைக் கொண்டுள்ளது, மகாராஷ்டிராவின் முக்கிய விமான நிலையாமான சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையம் அதானி குழுமத்தால் நடத்தப்படுவதாகும். அதானி எலெக்ட்ரிசிட்டி மும்பை லிமிடெட் மும்பையின் முக்கிய மின்சாரம் வழங்கும் நிறுவனங்களில் ஒன்றாகும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com