கேரளாவில் மலை இடுக்கில் 3 நாட்களாக சிக்கி தவித்த இளைஞர் மீட்பு.!!

கேரளாவில் செங்குத்தான குகைக்குள் 3 நாட்களாக சிக்கி தவித்த இளைஞரை இந்திய ராணுவம் பத்திரமாக மீட்டுள்ளது. 

கேரளாவில் மலை இடுக்கில் 3 நாட்களாக சிக்கி தவித்த இளைஞர் மீட்பு.!!

கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், மலம்புழா மலைப் பகுதியில் பாபு என்ற இளைஞர் தன் நண்பர்களுடன் டிரக்கிங்க் சென்றதாக கூறப்படுகிறது.

மலையேற்றத்தில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது இளைஞரின் கால் இடறி தவறி விழுந்ததில் செங்குத்தான மலை இடுக்கு ஒன்றில் சிக்கிக் கொண்டார். மலை இடுக்கில் 3 நாட்களாக சிக்கி தவித்த இளைஞரை மீட்க தீயணைப்பு துறை, பேரிடர் மீட்பு குழுவினர் மேற்கொண்ட முயற்சியும், கடலோர காவல் படையினர் ஹெலிகாப்டர் மூலம் மேற்கொண்ட முயற்சியும் தோல்வியில் முடிவடைந்தது.

இதையடுத்து அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் இந்திய ராணுவத்தின் உதவியை கோரினார். இதையடுத்து மலை இடுக்கில் சிக்கிக் தவித்த இளைஞரை மீட்க இந்திய ராணுவம் களமிறங்கியது.

இந்திய ராணுவம் மேற்கொண்ட பெரும் முயற்சியின் பலனாக இளைஞர் பத்திரமாக மீட்கப்பட்டார். இதனிடையே இளைஞர் மீட்கப்படும் காட்சி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.