கர்நாடக அமைச்சர் பதவி விலக வலியுறுத்தி இளைஞர் காங்கிரசார் போராட்டம்!!

கர்நாடகா விவகாரம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இல்லம் அருகே  இளைஞர் காங்கிரசார் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கர்நாடக அமைச்சர் பதவி விலக வலியுறுத்தி இளைஞர் காங்கிரசார் போராட்டம்!!

கர்நாடகாவில், ஒப்பந்ததாரர் சந்தோஷ் பாட்டீல் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் அமைச்சர் ஈஸ்வரப்பா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து அவர் பதவி விலக வேண்டும் என காங்கிரஸ் போர்க்கொடி தூக்கியுள்ளது.

ஈஸ்வரப்பா ஒப்பந்த தொகையில் 40 சதவீதம் லஞ்சம் கேட்பதாக பகிரங்கமாக சந்தோஷ் பாட்டீல் குற்றஞ்சாட்டியிருந்த நிலையில், உடுப்பியில் உள்ள ஒரு ஓட்டலில் சந்தோஷ் பாட்டீல் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அதற்கு முன் தன் மரணத்திற்கு ஈஸ்வரப்பா கொடுத்த தொல்லை தான் காரணம் என வீடியோ பதிவு செய்து வெளியிட்டுள்ளார். இதனையடுத்து ஈஸ்வரப்பா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். எனவே கர்நாடகாவில் ஈஸ்வரப்பா பதவி விலக வேண்டும் என காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.