உன் பெயர் முகமதா.. ஆத்திரத்தில் முதியவரை கடுமையாக தாக்கி உயிரிழக்க செய்த பாஜக தொண்டர்!!

மத்தியப்பிரதேசத்தில், பெயர் முகமதா எனக் கேட்டு பாஜக தொண்டரால் தாக்கப்பட்ட மனநலம் பாதிக்கப்பட்ட முதியவர் உயிரிழந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

உன் பெயர் முகமதா.. ஆத்திரத்தில் முதியவரை கடுமையாக தாக்கி உயிரிழக்க செய்த பாஜக தொண்டர்!!

ரத்லம் மாவட்டத்தைச் சேர்ந்த பன்வர்லால் ஜெயின் என்ற 65 வயது முதியவர் காணாமல் போனதாக வந்த புகாரை அடுத்து அவரை தேடி வந்த போலீசார், நீமுச் என்கிற பகுதியில் அவரது உடலை சடலமாக கண்டறிந்தனர். அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து பன்வர்லாலுக்கு அவர்தம் குடும்பத்தினர் இறுதிச்சடங்கு செய்த நிலையில், சமீபத்தில் வைரலான வீடியோவைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். அதில் பாஜக தொண்டர் தினேஷ் குஷ்வாஹா என்பவர், பன்வர்லாலிடம், உன் பெயர் முகமது தானே எனக்கேட்டு தொடர்ந்து கடுமையாக தாக்குவது பதிவாகியிருந்தது.

இதன் பின்னரே பன்வர்லால் உயிரிழந்ததும் தெரிய வந்தது. இந்நிலையில் அவரின் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் தினேஷ் குஷ்வாஹா கைது செய்யப்பட்டார். இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து மத்தியப்பிரதேசத்தில் எதிர்கட்சிகள் பாஜகவை கடுமையாக சாடி வருகின்றனர்.