தேசியக் கட்சியாகுமா ஆம் ஆத்மி....!!!

தேசியக் கட்சியாகுமா ஆம் ஆத்மி....!!!

ஆம் ஆத்மி கட்சியை தேசியக் கட்சியாக அங்கீகரிப்பது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருவதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

கர்நாடகா தேர்தல் தொடர்பாக இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவரிடம் ஆம் ஆத்மி கட்சிக்கு தேசிய அங்கீகாரம் அளிப்பது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது.  அப்போது ஆம் ஆத்மி கட்சிக்கு தேசியக் கட்சி அங்கீகாரம் அளிப்பது பரிசீலனையில் உள்ளது எனவும் அது குறித்து விரைவில் தெரிவிப்போம் எனவும்  கூறினார்.

இதையும் படிக்க:   ஊருக்குள் புகுந்த கடல் நீா் ....மீனவா்கள் மனித சங்கிலி போராட்டம்....