இந்திய காங்கிரஸ் கட்சியின் அடுத்த தேசியத் தலைவர் யார்?

இந்திய காங்கிரஸ் கட்சியின் அடுத்த தேசியத் தலைவர் யார்?

தலைவர் பதவிக்கான வேட்புமனுத் தாக்கல்

இந்திய காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவருக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று தொடங்கவுள்ளது.
கடந்த 2019_ ஆம் ஆண்டு தேர்தல் தோல்விக்கு பின் அன்று காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவராகயிருந்த ராகுல் காந்தி தேர்தல் தோல்விக்கு முழுப் பொறுப்பையும் தானே ஏற்றுக்கொண்டுத் தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். அதனையடுத்து 2017_ ஆம் ஆண்டிற்குப் பின்னர் சோனியா காந்தி மீண்டும் 2019_ ல் காங்கிரஸ் கட்சியின் தேசிய இடைக்காலத் தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

ராகுல் காந்தி திட்டவட்டம் 
 
ராகுல் மீண்டும் கட்சியின் தலைவராக வேண்டும் என்று அக்கட்சியின் தலைவர்கள் பலர் வலியுறுத்தி வரும் நிலையில் "நான் கட்சிக்காகவும் நாட்டு மக்களின் நலனுக்காகவும் களத்தில் நின்றுப் போராடுகிறேன் ஆனால் உறுதியாக நான் தலைவர் பதவிக்குப் போட்டியிடமாட்டேன்" என திட்டவட்டமாக ராகுல் காந்தி கூறியுள்ளார். தனது உடல்நிலை மற்றும் வயது மூப்பின் காரணமாக அடிக்கடி ஓய்வுவெடுக்க வேண்டியிருப்பதால் சோனியா காந்தியும் கட்சியின் தலைவராக முடியாது என்றுத் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க | அசோக் கெலாட், சசி தரூர் இடையே போட்டி...யார் அடுத்த காங்கிரஸ் தலைவர்?

It's not a post, but…': Rahul Gandhi's advice to Congress president  hopefuls | Latest News India - Hindustan Times


அனல் பறக்கும் மனுத்தாக்கல்

சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் தலைவர் பதவியைத் தவிர்த்ததால் அவர்களது குடும்பத்தை சேர்ந்தவரல்லாது வேறு ஒருவர் தலைவராகப் பொறுப்பேற்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் மற்றும் பாராளுமன்ற உறுப்பினரான சசி தரூர் இருவரும் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவருக்குப் போட்டியிடுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.


யார் தேசியத் தலைவர்?

சசி தரூரும், அசோக் கெலாட்டும் தேர்தல் அறிவிப்பிற்குப் பின்னர் சோனியா காந்தியை சந்தித்துப் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளனர். இதனை அடுத்து  இருவரில் தலைவராகும் வாய்ப்பு யாருக்கு அதிகம் இருக்கிறது என்ற எதிர்ப்பார்ப்பு காங்கிரஸை சார்ந்தத் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது, எனினும் அசோக் கெலாட்டிருக்கு அதிக வாய்ப்புள்ளதாக செய்திகள் பரவி வருகிறது.


நம்பிக்கை நாயகன் 

பாஜக ஆட்சியைப் பிடித்ததிலிருந்து காங்கிரஸ் தொடர் சரிவுகளை சந்தித்து வருகிறது. உள்கட்சியில் ஏற்படும் பிரச்சனைகள், கட்சி தாவல்கள் என காங்கிரஸின் பலம் நாளுக்கு நாள் குறைந்துக் கொண்டேயிருக்கிறது. ஆபரேஷன் தாமரையை செயல்படுத்தி காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கி கர்நாடகாவிலும் மத்திய பிரதேசத்திலும் ஆட்சியைக் கைப்பற்றியது பாஜக. அதே பாணியில் ராஜஸ்தான் அரசையும் கவிழ்க்க நினைத்தது, ஆனால் அசோக் கெலாட் தனது சாமர்த்தியத்தால் அதிருப்தி எம்.எல்.ஏக்களை சமாதானம் செய்து பாஜகாவின் ஆபரேஷன் தாமரையைத் தோல்வியுற செய்தார். இதனால் ராகுல் காந்தி குடும்பத்தின் "நம்பிக்கை நாயகனாக"  அசோக் கெலாட் இருப்பதால் கட்சியின் தலைவராகும் வாய்ப்பு அவருக்கே அதிகம் உள்ளதாக அரசியல் வட்டாரங்கள்  தெரிவிக்கின்றன.

----- அறிவுமதி அன்பரசன்