பழங்குடியின பட்டியலில் புதிதாக சேர்க்கப்பட்ட பிரிவினர் யார்? யார்?

பழங்குடியின பட்டியலில் புதிதாக சேர்க்கப்பட்ட பிரிவினர் யார்? யார்?

தமிழ்நாடு அரசின் நீண்ட நாள் கோரிக்கையை பழங்குடியின பட்டியலின பிரிவில் சேர்க்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய அமைச்சர் அர்ஜுன் முண்டா தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில்:

இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மத்திய அமைச்சர்கள் அனுராக் தாகூர் மற்றும் அர்ஜூன் முண்டா அகியோர் செய்தியாளர்களிடம் விளக்கினர். அப்போது பேசிய மத்திய பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் அர்ஜூன் முண்டா, தமிழ்நாட்டின் நீண்டகால  கோரிக்கையான "நரிக்குறவர்" சமூகத்தை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாகக் கூறினார்.  

பிற மாநிலங்களில்:

இதேபோல் சத்தீஸ்கர் மாநிலத்தின் பிர்ஜியா சமூகத்தையும் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவித்தார். மேலும்,  ஹிமாச்சல் பிரதேச மாநிலத்தில் வசிக்கும் ஹட்டி சமூகத்தையும் சேர்ந்த மக்களையும் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய பழங்குடியினத்துறை அமைச்சர் அர்ஜுன் முண்டா தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: "இது சுதந்திரத்திற்கான போராட்டம், வரவிருக்கும் எதிர்காலத்திற்கான கடந்த காலத்துக்கான சுதந்திரம்."