நாட்டில் முககவசம் அணிய தேவையில்லாத நிலை எப்போது வரும்? அறிவிப்பு உள்ளே!

முககவசம் இனி அணியத்தேவையில்லை என்ற நிலை இந்தியாவில் எப்போது உருவாகும் என மும்பை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

நாட்டில் முககவசம் அணிய தேவையில்லாத நிலை எப்போது வரும்? அறிவிப்பு உள்ளே!

முககவசம் இனி அணியத்தேவையில்லை என்ற நிலை இந்தியாவில் எப்போது உருவாகும் என மும்பை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

மகராஷ்டிராவில் கொரோனா தொடர்பான பொது நல வழக்குகளை விசாரித்த மும்பை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.எஸ்.குல்கர்னி, அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்ட நிலைக்கு எடுத்துக்காட்டாக கடந்த ஞாயிற்று கிழமை நடந்த விம்பிள்டன் இறுதி போட்டியை உதாரணமாக தெரிவித்துள்ளார். டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் பிரிவில் செர்பிய வீரர் நோவாக் ஜோகோவிச் வெற்றிப்பெற்றிருந்த நிலையில், முழுவதுமாக மூடப்பட்டு நிரம்பி வழிந்த அந்த அரங்கத்திலிருந்த பலரும் முககவசம் இன்றி ஜோகோவிச் ஆட்டத்தை கண்டுகளித்துள்ளனர் என கூறினார்.

தீவிர தேடுதலுக்கு பின் ஒரே ஒரு பெண் மட்டுமே முகக்கவசம் அணிந்ததை கண்டுபிடித்ததாகவும், இதுபோன்று முககவசம் அணிய தேவையில்லாத நிலை இந்தியாவில் எப்போது உருவாகும் என கேள்வி எழுப்பியுள்ளார்.