மூன்று மாநிலங்களிலும் தேர்தல் எப்போது....இன்று அறிவிப்பு!!!

மூன்று மாநிலங்களிலும் தேர்தல் எப்போது....இன்று அறிவிப்பு!!!

2018ஆம் ஆண்டைப் போலவே இம்முறையும் மூன்று மாநிலங்களிலும் ஒரே கட்டமாக சட்டமன்றத் தேர்தல் நடத்தப்படலாம்.  மூன்று மாநிலங்களும் 60-60 உறுப்பினர்களைக் கொண்டுள்ளன. 

தேர்தல் எப்போது:

திரிபுரா, மேகாலயா மற்றும் நாகாலாந்து ஆகிய மூன்று வடகிழக்கு மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் இன்று அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.  மூன்று மாநிலங்களின் சட்டசபைகளின் பதவிக்காலம் மார்ச் மாதத்துடன் முடிவடையவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  

ஒரே கட்டமாக:

2018ஆம் ஆண்டைப் போலவே இம்முறையும் மூன்று மாநிலங்களிலும் ஒரே நேரத்தில் சட்டமன்றத் தேர்தல் ஒரே கட்டமாக நடத்தப்படலாம் என தேர்தல் ஆணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்த மூன்று மாநிலங்களும் 60-60 சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்டுள்ளன. 

பதவிக்காலம் முடிவு:

நாகாலாந்து சட்டப் பேரவையின் பதவிக்காலம் மார்ச் 12ஆம் தேதியும், மேகாலயா சட்டப்பேரவை மார்ச் 15ஆம் தேதியும், திரிபுரா சட்டப்பேரவையின் பதவிக்காலம் மார்ச் 22ஆம் தேதியும் முடிவடைகிறது.  

தற்போது:

திரிபுராவில் தற்போது பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது.  அதேசமயம் நாகாலாந்தில் என்டிபிபியின் நெய்பியு ரியோ முதலமைச்சராக பதவி வகிக்கிறார்.   மேகாலயாவில் என்பிபியின் கொன்ராட் சங்மாவின் ஆட்சி நடைபெறுகிறத்ய்.  இரு மாநிலங்களிலும் ஆளும் கூட்டணியில் பாஜக அங்கம் வகிக்கிறது என்பது கவனிக்கத்தக்கது.

-நப்பசலையார்

இதையும் படிக்க:  தத்தெடுத்தால் ஓய்வூதியம் இல்லையா....சட்டம் கூறுவதென்ன?!!