இது என்ன காமெடி சர்க்கஸா....கேலிக்குள்ளான ராகுலின் இந்திய ஒற்றுமை பயணம்...!!!

இது என்ன காமெடி சர்க்கஸா....கேலிக்குள்ளான ராகுலின் இந்திய ஒற்றுமை பயணம்...!!!

இந்திய ஒற்றுமை பயணத்தின் 70வது நாளான நேற்று ராகுல் காந்தி மகாராஷ்டிராவில் வாஷிம் பகுதியில் மக்களுடன் உரையாற்றினார்.  உரையின் முடிவில் ராகுல் காந்தி தேசிய கீதத்தை ஒலிக்க கூறினார்.  அப்போது அங்கு தவறுதலாக வேறு பாடல் ஒலிக்கப்பட்டது.  தற்போது அது பாஜகவின் கடும் விமர்சினத்துக்குள்ளாகியுள்ளது.

இந்திய ஒற்றுமை பயணம்:

இந்திய ஒற்றுமை பயணம் காங்கிரஸால் முன்னெடுக்கப்பட்டு 150 நாள் பயணமாக நாடு முழுவதும் மக்களை சந்திக்கும் பயணமாக ஒருங்கிணைக்கப்பட்டு ராகுல் காந்தி தலைமையில் நடைபெற்று வருகிறது.

மகாராஷ்டிராவில் ராகுல்:

இந்திய ஒற்றுமை பயணத்தின் ஒரு பகுதியாக மகாராஷ்டிராவின் வாஷிம் பகுதியை வந்தடைந்தார் ராகுல்.  அங்கு மக்களிடையே உரையாற்றிய ராகுல் உரையின் முடிவில் தேசிய கீதத்தை ஒலிக்க கூறினார்.

வேறு நாட்டு தேசிய கீதமா?:

தேசிய கீதத்திற்கு மரியாதை தரும் விதமாக நின்றிருந்த ராகுல் சில வினாடிகளுக்கு பிறகே ஒலிக்கப்பட்ட பாடல் தேசிய கீதம் இல்லை எனக் கூறி பாடலை நிறுத்த வலியுறுத்தினார்.  அந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

ட்விட்டர் பயனாளர் ஒருவர் நிகழ்ச்சியில் ஒலிக்கப்பட்ட பாடல் நேபாளத்தின் தேசிய கீதம் எனப் பதிவிட்டுள்ளார்.

பாஜகவினரின் விமர்சனம்:

நாட்டின் தேசிய கீதத்தை கூட அறியாத ராகுல் இந்தியாவை ஒன்றிணைக்க போகிறாரா என கேலியாக கேள்வியெழுப்பியுள்ளது பாஜக.  மகாராஷ்டிட்ராவின் பாஜக தலைவரான அம்ரித் “ இது என்ன ராகுல் தேசிய கீதம் கூட தெரியவில்லையா? இதுதான் உங்கள் தேசப் பக்தியா?” எனக் கிண்டலாக விமர்சித்துள்ளார்.

அவரைத் தொடர்ந்து பாஜக செய்தி தொடர்பாளரான நிதேஷ் ரானே ’ராகுலின் காமெடி சர்க்கஸ்’ எனப் பதிவிட்டு அதனுடன் வீடியோவையும் இணைத்துள்ளார்.

-நப்பசலையார்

இதையும் படிக்க:   நிலவில் நீல் ஆம்ஸ்ட்ராங் கால் வைத்தது உண்மையா..? அமெரிக்காவின் ஆர்ட்டெமிஸ் தோல்விகள் கூறுவதென்ன?!!